கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயர் தொழில்நுட்ப பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் பன்னாட்டு மற்றும் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக ஆல்செக் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மூத்த மனிதவள மேம்பாட்டு அதிகாரி எம்.சுரேந்தர், டெக் மஹிந்திரா நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி திவ்யா மற்றும் ஹெக்சவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரி பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார்கள்.
விழாவிற்கு கல்லூரியின் செயலாளர் கே.சி.கருப்பணன் தலைமை தாங்கினார். கல்லூரியின் இணைச்செயலாளர் கெட்டிமுத்து தலைமை உரை வழங்கினார். தலைவர் வெங்கடாச்சலம் மற்றும் அறங்காவலர் கே.ஆர்.கவியரசு, முதன்மை செயல் அதிகாரி ஜி.கெளதம், பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் எஸ்.பிரகதீஸ்வரன், என்ஜினீயரிங் கல்லூரியின் கல்வி அதிகாரி அருண்ராஜா, கலைக் கல்லூரியின் துணை முதல்வர் சி.நஞ்சப்பா, துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கல்லூரி முதல்வர் தங்கவேல் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் மொத்தம் 603 மாணவர்களில் 123 பொறியியல் மாணவர்களும், 113 பாலிடெக்னிக் மாணவர்களும், 367 கலை அறிவியல் மாணவர்களும் அதிகபட்ச சம்பளமாக 8 லட்சமும் சராசரி சம்பளமாக 3 லட்சத்திற்குமான பணி நியமன ஆணையை பெற்றனர். இவ்விழாவின் இறுதியாக கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் மோகனசுந்தரம் நன்றி கூறினார். முன்னதாக பொறியியல் கல்லூரி முதல்வர் தங்கவேலு அனைவரையும் வரவேற்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu