/* */

ஆதி திராவிடர் பழங்குடி நலத்துறைக்கு ரூ 3,513 கோடி நிதி ஒதுக்கீடு; தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழக அரசின் பட்ஜெட்டில், ஆதி திராவிடர் பழங்குடி நலத்துறைக்கு ரூ 3,513 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஆதி திராவிடர் பழங்குடி நலத்துறைக்கு ரூ 3,513 கோடி நிதி ஒதுக்கீடு; தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
X

தமிழக அரசின் நிதிநிலை அறிவிப்புகள் (கோப்பு படம்)

தமிழ்நாடு சட்டசபையில் இன்று 2023-24ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தற்போது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் துவங்கியது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட் திட்டங்களை அறிவித்து உரையாற்றி வருகிறார். முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு முக்கிய அம்சங்கள்;

* சென்னை அம்பத்தூரில் ரூ.150 கோடி மதிப்பில் திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

* கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் ரூ80 கோடி மதிப்பீட்டில் அதி நவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

* தொழில் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உலகத் தரமிக்க பயிற்சி வழங்கப்படும். இதற்காக, 120 கோடியில் திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும். இத்திட்டத்தில் 12.7லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

* சென்னையில், சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் சிஎம்டிஏ மூலம் சென்னையில் அமைக்கப்படும்.

* நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது உயிர் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை 20 லட்சம் ரூபாயில் இருந்து இருமடங்காக உயர்த்தி 40 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதிய வகுப்பறைகள் ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி நிதி ஒதுக்கீடு.

* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ், சென்னையில் உலகளவில் விளையாட்டு நகரத்தை அரசு அமைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். ரூ.25 கோடி மதிப்பீட்டில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கம் சீரமைக்கப்படும்.

* முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது, 500 கோடி ரூபாய் செலவில் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும்.

* அனைத்து அரசு தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம். காலை உணவு திட்டம் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.

* ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமைப் பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும். முதல் நிலைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500, முதன்மைத் தேர்வுக்கு ரூ.25,000 வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

* மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டத்திற்காக 39 ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படும்

* மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ. 305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

*ஆதி திராவிடர் பழங்குடி நலத்துறைக்கு ரூ 3,513 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Updated On: 20 March 2023 6:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  7. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  8. வீடியோ
    போராட்டங்களை மக்கள் மீது திராவிட அரசுகள் தினிக்குது !#protest #dmk...
  9. வீடியோ
    சமூக நீதி சொல்லிட்டு எத்தனை இஸ்லாமியருக்கு சீட் கொடுத்தாங்க ! #seeman...
  10. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்