/* */

கார்த்திகை தீபத்திருவிழா; திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2,692 சிறப்பு பஸ்கள் மூலம் 6,500 நடைகள், திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது.

HIGHLIGHTS

கார்த்திகை தீபத்திருவிழா; திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
X

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா; சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை

பஞ்சபூதத் தலங்களில் திருவண்ணாமலை அக்னித் தலமாக விளங்குகிறது. அக்னிக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை, அந்த நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அண்ணுதல் என்பதற்கு 'நெருங்குதல்' என்று பொருள். 'அண்ணா' என்பது, 'நெருங்க முடியாத' என்ற பொருளைத் தரும். பிரம்மனாலும், விஷ்ணுவாலும் நெருங்க முடியாத நெருப்பு மலையாக நின்றதால், இத்தலம் 'அண்ணாமலை' என்று பெயர் பெற்றது.

இத்தல கிளி கோபுரத்தின் கீழ் இட பக்கம் ஒரு விநாயகர் சன்னிதி உள்ளது. இவருக்கு 'அல்லல் தீர்க்கும் விநாயகர்' என்று பெயர். முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் உள்ள ஆறு படைவீடுகளில், இது முதல் படைவீடாகும்.

கிரிவலப்பாதையின் எட்டு திசைகளுக்கும் எட்டு லிங்கங்கள் இருக்கின்றன. இதனை அஷ்டலிங்கங்கள் என்கிறோம். அவை, இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசான லிங்கம் ஆகியவை ஆகும். இங்குள்ள இறைவன், 'அண்ணாமலையார், அருணாச்சலேஸ்வரர்' என்றும், அம்பாள் 'உண்ணாமுலையம்மன், அபிதகுஜாம்பாள்' என்றும் அழைக்கப்படுகிறார்கள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது 'அருணை சக்தி பீட'மாக விளங்குகிறது.

25 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரமாண்ட ஆலயம் இது. இதில் 9 கோபுரங்கள், 6 பிரகாரங்கள், 142 சன்னிதிகள், 306 மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்டவை அடங்கியிருக்கின்றன.

அண்ணாமலையார் ஆலயத்தின் தற்போதைய முழுமையான கட்டிட அமைப்புகள் அனைத்தும் கட்டி முடிக்க, 1000 ஆண்டுகள் ஆகி இருப்பதாக கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. கயிலாய மலையில் சிவபெருமான் வீற்றிருப்பதால் அது புனிதமானது. அதே போல் சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதால் திருவண்ணாமலையும் புனிதமானதாக கருதப்படுகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிசம்பர் 6-ம்தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த, 2-ம் கட்ட ஆய்வுக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் முருகேஷ் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது :

கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு, 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள். 9 இடங்களில் தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள் அமைக்கப்படுகிறது. அங்கிருந்து பக்தர்கள், தடையின்றி தரிசனம் மற்றும் கிரிவலம் செய்துவிட்டு, திரும்பி செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இதுகுறித்த அறிவிப்புகளை வெளிப்படுத்த வேண்டும். வரும் பவுர்ணமி கிரிவலத்தை தீபத் திருவிழாவுக்கான ஒத்திகையாக பார்க்க வேண்டும். கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை உள்ளே அனுமதித்து, வெளியே செல்வதற்கான வழித்தடத்தை இந்து சமய அறநிலையத்துறை தெரிவிக்க வேண்டும்.

தரிசனத்துக்கு ஒரு சிலரை நீண்ட நேரம் அனுமதிப்பதால், கூட்ட நெரிசல் அதிகரிக்கிறது. போலீஸ் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்த வேண்டும், என்றார்.

12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக, போலீஸ் எஸ்.பி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2,692 சிறப்பு பஸ்கள் மூலம் 6,500 நடைகள் இயக்கப்பட உள்ளன. மகா தீபத்தன்று பரணி தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருதல் நிகழ்வை விஐபிக்கள் தரிசிப்பதற்கு தேவையான நடவடிக்கை மற்றும் அவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Updated On: 5 Nov 2022 11:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலுடன் இந்த உணவு பொருட்களை சாப்பிடாதீங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான கோதுமை முறுக்கு செய்வது எப்படி?
  3. வீடியோ
    இந்த படம் கிடைச்சது ரொம்ப சந்தோஷம் Vidharth !! || #anjaamai #Vidharth...
  4. லைஃப்ஸ்டைல்
    சருமம் மற்றும் கூந்தல் இரண்டையும் பளபளப்பாக மாற்ற என்ன செய்யணும்...
  5. வீடியோ
    Vani Bhojan -யை Rambha என கிண்டல் !! #anjaamai #anjaamaimovie...
  6. ஈரோடு
    ஈரோடு அரசு மருத்துவமனையில் தொடரும் வீல்சேர் பிரச்னை:...
  7. இந்தியா
    என்டிஏ அமோக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும்! பல...
  8. லைஃப்ஸ்டைல்
    வெள்ளை முள்ளங்கியில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. வீடியோ
    NEET தேர்வு அவசியமா ? Vani Bhojan பரபரப்பு பதில் ! |#neet #vanibhojan...
  10. சினிமா
    நீங்களும் நடிகர் மாதவனைப் போல ஜொலிக்க வேண்டுமா? இத ஃபாலோ பண்ணுங்க..!