ருசியான கோதுமை முறுக்கு செய்வது எப்படி?

Wheat Murukku Recipe- ருசியான கோதுமை முறுக்கு செய்வது எப்படி? ( கோப்பு படம்)
Wheat Murukku Recipe- கோதுமை முறுக்கின் எளிய செய்முறை
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* ஓமம் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதன் மேல் இட்லி தட்டை வைத்து, மேலே ஒரு துணியை விரித்து, அதில் கோதுமை மாவை போட்டு சுற்றி மூடி வைத்து 10-15 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* பின் வேக வைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த மாவானது சற்று கட்டியாக இருக்கும். இந்த கட்டிகளை உடைக்க, அந்த மாவை மிக்சர்ஜாரில் போட்டு 3-4 முறை அடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மாவை இப்படி வேக வைக்கும் போது, மாவில் உள்ள பிசுபிசுப்புத்தன்மை போய், முறுக்கு பிழிய வசதியாக இருக்கும்.
* பின்பு அந்த மாவுடன் மிளகாய் தூள், பெருங்காயத் தூள், ஓமம், உப்பு மற்றும் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, முதலில் கைகளால் நன்கு கிளறி விட வேண்டும். * பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் முறுக்கு உழக்கை எடுத்து, அதனுள் ஸ்டார் அச்சை வைத்து, உள்ளே எண்ணெய் தடவி, பிசைந்து வைத்துள்ள முறுக்கு மாவை வைத்து, முறுக்குகளாக ஒரு துணியில் பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான கோதுமை முறுக்கு தயார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu