/* */

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இன்று காலை வீடு திரும்பினார்.

HIGHLIGHTS

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்
X

முதல்வர் ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்றைய தினம் காலை தலைமை செயலகத்தில் முத்தான முத்திரை திட்டம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். பிறகு, சாலை மற்றும் பால பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டத்திலும் பங்கேற்றார். இதற்கு பிறகு அதாவது, நேற்று பிற்பகல் முதல்வர் ஸ்டாலினுக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது. எனவே, மதியம் 3 மணிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை வயிறு சிகிச்சை நிபுணர் டாக்டர் பழனிசாமி, பரிசோதனை செய்து முதல் கட்ட சிகிச்சையையும் தந்தார். டாக்டர் பழனிசாமிதான், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, வயிறு உபாதை காரணமாக, மருத்துவமனைக்கு செல்லும்போது சிகிச்சை அளித்தவர் ஆவார். இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை செய்யப்பட்டது..

பின்னர், மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின் வழக்கமான உடல் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைகள் நிறைவுக்கு பின்பு நாளை (ஜூலை 4) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அறிக்கை வெளியாகியிருந்தது.

இந்நிலையில், உடல் சோர்வு மற்றும் வழக்கமான பரிசோதனை முடிந்து, முதல்வர் ஸ்டாலின் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. மருத்துவமனை வெளியிட்டிருந்த அறிக்கையின் படியே, முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகிச்சை முடிந்து இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

முன்னதாக, அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதல்வர், அனுமதிக்கப்பட்டிருந்ததால், அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 7 July 2023 5:01 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  2. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  5. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  9. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  10. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்