/* */

புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவ தேவலாயங்களில், புனிதவெள்ளியை முன்னிட்டு, சிலுவை பாதை நிகழ்ச்சி, சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

HIGHLIGHTS

புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
X

கோப்புப்படம் 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவ தேவலாயங்களில், புனிதவெள்ளியை முன்னிட்டு, சிலுவை பாதை நிகழ்ச்சி, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதில், ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும், 40 நாட்களை, தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். அதில், ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள், புனித வெள்ளியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மக்களின் பாவங்களுக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ஏசு கிறிஸ்துவை நினைவு கூறும் வகையில், கிறிஸ்துவர்கள், மனம் வருந்தி தொடர் பிராத்தனையில் ஈடுபட்டு, இயேசுவின் பாடுகளை நினைவு கூறுவர்.

புனிதவெள்ளி என்றால் தவம். கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூறும் புனிதமான நாள். ஏசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதை குறிக்கும் நாளாக ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதை நினைவு கூறும் வகையில், நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில், சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில், பங்கு தந்தை மாணிக்கம் தலைமையில், சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.

அப்போது, கிறிஸ்தவர்கள் பாட்டுப்பாடியும், கிறிஸ்து பாடு மரணத்தை உணர்த்தும் 7 வார்த்தைகளை கூறி பிரார்த்தனை செய்தனர். கிறிஸ்தவ தேவாலயத்தில், மும்மணிநேர தியான ஆராதனை நடந்தது.

அதேபோல், மோகனூர் அடுத்த பேட்டப்பாளையத்தில் உள்ள புனித செசீலி ஆலயத்தில், பங்கு தந்தை ஜான்போஸ்கோ தலைமையில், சிறப்பு பிராத்னை நடந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடந்த, சிறப்பு ஆராதனையில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில் இயேசு உயிர்த்தெழுந்தார். இதை நினைவு கூறும் வகையில், மார்ச் 31ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அன்று அதிகாலையில், அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது.

Updated On: 29 March 2024 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...