தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு

தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள்  கட்டணமின்றி அறை வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு

Namakkal news- தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு. (கோப்பு படம்)

Namakkal news- தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.

Namakkal news, Namakkal news today- சேவை குறைபாட்டினால், வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க தனியார் ரிசார்ட் நிறுவனத்திற்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.

கோவை மாவட்டம், கணபதியை சேர்ந்தவர் ரகுநாதன் (41). அவர், 2008ம் ஆண்டு ரூ. 2,13,751 கட்டணம் செலுத்தி, ஒரு தனியார் ரிசார்ட்ஸ் கம்பெனியில் உறுப்பினராக சேர்ந்தார். ஆண்டுக்கு 25 ஆண்டுகள் வரை 7 நாட்கள் இந்தியாவில் உள்ள அந்த கம்பெனியின் எந்த ரிசார்ட்ஸிலும் தங்கிக் கொள்ளலாம் என அப்போது அவருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிறுவனம் கூறியபடி தனக்கு அறைகளை ஒதுக்கி தரவில்லை. அதனால், 2034 வரை, தமக்கு நிறுவனம் வழங்கிய திட்டப்படி அறைகளை ஒதுக்கித் தர வேண்டும். நிறுவனத்தின் சேவை குறைபாட்டுக்காக, தமக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ரிசார்ட் கம்பெனி மீது கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

விரைவான விசாரணைக்காக, அந்த வழக்கு, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. விடுமுறை கால ரிசார்ட்ஸ் திட்டத்தின் கீழ், உறுப்பினராக சேருபவர்கள், ஒவ்வொரு ஆண்டும் திட்டத்திற்கு ஏற்ப ஆண்டு சந்தா கட்டணம் செலுத்த வேண்டும். ரகுநாதன், ஒரு ஆண்டு கூட சந்தா கட்டணம் செலுத்தவில்லை எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, நிறுவனத்தினர் வாதிட்டனர். விசாரணை முடிந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.

அதில், ரிசார்ட்ஸ்களில் தங்குவதற்கான வசதி வழங்குவது உள்ளிட்ட எந்த ஒரு சேவை திட்டங்களிலும், நுகர்வோர் உறுப்பினராக சேரும் போது நிபந்தனைகளை படித்து பார்த்து சேர்க்கை கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த வழக்கை தாக்கல் செய்தவர், ரூ. 2,13,751 ரூபாய் சேர்க்கை கட்டணம் செலுத்தி இருந்தாலும், விதிமுறையின்படி ஆண்டு சந்தாவை செலுத்தவில்லை. ஒவ்வொரு ஆண்டும் விடுதிகளில் தங்கினாலும், தங்காவிட்டாலும், ஆண்டு சந்தாவை செலுத்த வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், வழக்கு தாக்கல் செய்தவர் அறை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என கேட்க முடியாது. வழக்கு தாக்கல் செய்தவர், நிறுவனத்திடம் ஒயிட் சீசன் என்ற திட்டத்தில் சேர்ந்துள்ளார்.

ஆனால், வழக்கு தாக்கல் செய்தவர் முழு பணத்தையும் செலுத்தி, ஓராண்டு முடிவதற்கு முன், தன்னிச்சையாக அவரை ப்ளூ சீசன் என்ற திட்டத்திற்கு நிறுவனம் மாற்றி உள்ளது. வாடிக்கையாளருக்கு தெரிவிக்காமல் அவர் சேர்ந்த திட்டத்தில் இருந்து, மற்றொரு திட்டத்திற்கு உறுப்பினராக மாற்றியது நிறுவனத்தின் சேவை குறைபாடு. அதனால், வழக்கு தாக்கல் செய்தவருக்கு, வரும் 2034 வரை நிறுவன கம்பெனி ரிசார்ட்களில் ஒவ்வொரு ஆண்டும், 7 நாட்களுக்கு கட்டணம் இல்லாமல் தங்கிட அறை ஒதுக்கி தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story