போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
Coimbatore News- சாலையில் தேங்கியுள்ள கழிவு நீர்
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து இரவு முழுக்க விட்டு விட்டு கோவை மாநகர் பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கோவை மாநகர் பகுதிகளில் முக்கிய பிரதான சாலையில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.
இந்த நிலையில் கோவை குறிச்சி பிரிவிலிருந்து போத்தனூர் ரயில் நிலையத்திற்கு செல்லும் போத்தனூர் சாலையில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் மழை நீரோடு கழிவு நீரும் சாலையில் தேங்கி நின்றதால், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். ஒருபுறம் கோடை வெப்பத்தை தணிக்க மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், மறுபுறம் கழிவு நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கழிவுநீர் தேங்கி இருப்பதால் அப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகளவில் இருப்பதாகவும், கோவை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கழிவு நீரை அகற்றவும், மழை நீர் வடிகால் பாதையை தூர்வார வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள மழை நீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu