/* */

பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு

Coimbatore News- சவுக்கு சங்கர் இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
X

Coimbatore News- கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர்.

Coimbatore News, Coimbatore News Today- பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல திருச்சி, சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் காவல் துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர்.

இதனிடையே மத்திய சிறையில் காவலர்கள் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறிய நிலையில், அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே மற்றும் பரிசோதனைகள் மேற்கொண்டதில் வலது கையில் இரண்டு இடங்களில் லேசான கிராக் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதற்காக மாவு கட்டு போட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்த நிலையில், அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனலில் கடந்த அக்டோபர் மாதம் சவுக்கு சங்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு பரப்பி இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாகவும், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் கோவை பந்தயசாலை காவல் நிலையத்தில் நேதாஜி பேரவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் புகார் அளித்தார்.

அந்த புகாரில் பந்தய சாலை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர் மீது இரண்டாவது வழக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 15 May 2024 3:30 AM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...