கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு யானை..!
இருசக்கர வாகனத்தை பின்னங்காலால் உதைத்த காட்டு யானை.
கடம்பூர் வனப்பகுதியில் சென்ற இருசக்கர வாகனத்தை காட்டு யானை காலால் உதைத்து பந்தாடியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது வனச்சரகம் கடம்பூர். இந்த வனச்சரக வனப்பகுதியில் புலிகள், கடமான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள், கரடிகள், மான்கள் போன்ற வனவிலங்குகள் காணப்படுகின்றன.
தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. மரங்கள் காய்ந்து விட்டன. செடி, கொடிகள் கருகி காணப்படுகின்றன. மேலும், நீர்நிலைகளும் வறண்டு விட்டன. இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் கடம்பூர் மலைப் பகுதியில் உள்ள சாலையை அடிக்கடி கடந்து செல்கின்றன.
இந்நிலையில், கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள இருட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இரு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே சாலையில் வந்த ஒற்றை காட்டு யானையைக் கண்டு அஞ்சிய இருவரும் இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
அந்த காட்டு யானை கீழே கிடந்த இருசக்கர வாகனத்தை தனது முதலில் முன்னாங்காலால் மிதித்தது. பின்னர், பின்னங்காலால் உதைத்து சாலையோர பள்ளத்தில் தள்ளியது. இந்த காட்சியை இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் சமூக வலைத்தளங்களில் எடுத்து பதிவிட்டு உள்ளனர். தற்போது இக்காட்சி வைரலாகி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu