/* */

எஸ்.வாழவந்தி மாரியம்மன் சித்திரைத் திருவிழா: பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

எஸ்.வாழவந்தி அருள்மிகு மாரியம்மன் சித்திரைத் தேர்த்திருவிழாவில், இன்று ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

HIGHLIGHTS

எஸ்.வாழவந்தி மாரியம்மன் சித்திரைத் திருவிழா: பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
X

எஸ்.வாழவந்தி அருள்மிகு மாரியம்மன் கோயில், சித்திரைத் திருவிழாவில் பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

எஸ்.வாழவந்தி அருள்மிகு மாரியம்மன் சித்திரைத் தேர்த்திருவிழாவில், இன்று ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள சர்க்கார் வாழவந்தியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் எஸ். வாழவந்தி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 18 கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட கோயிலாகும், ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு சித்திரைத் தேர்த்திருவிழா, கடந்த தொடர்ந்து 9ம் தேதி, எஸ்.வாழவந்தி சந்தையில் அல் எடுத்து 10 ந்தேதி செவ்வாய்க்கிழமை, அதிகாலை 6 மணி அளவில் கம்பம் ஊன்றி காப்பு கட்டி திருவிழா தொடங்கியது, தொடர்ந்து நாள்தோறும் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து கோயில் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டனர்.

கடந்த15 ஆம் தேதி திங்கட்கிழமை மறுகாப்பு கட்டப்பட்டது. பின்னர், தினசரி சுவாமி இரவு திருவீதி உலாநிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று 21 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை வடி சோறு பூஜை நடைபெற்று, இன்று திங்கள்கிழமை அதிகாலை 3 மணி அளவில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர், கோயில் முன்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீக்குண்டம் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சுவாமி உற்சவர், பாலப்பட்டி கொமாரபாளையம் காவிரி ஆற்றிற்கு எடுத்துச் சென்று, பக்தர்கள் புனித நீராடி, சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனைகள் செய்து, மலர்களால் அலங்காரம் செய்து, அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் சுவாமியை சப்பரத்தில் பக்தர்கள் தூக்கி கொண்டு ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் ஏராளமான ஆண்களும், பெண்களும் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்கள். தொடர்ந்து பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் மற்றும் உருளு தண்டம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சுவாமிக்கு கிடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெறும். காலை 10 மணி அளவில் சுவாமி 30 அடி உயரம் கொண்ட தேரில் ரதம் ஏறும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 5 மணியளவில் திரளான பக்தர்கள் தேவடம் பிடித்து தேர் இழுப்பார்கள்.

புதன்கிழமை அதிகாலை கம்பம் பிடுங்கி சிங்கார பாலியில் விடப்படும். தொடர்ந்து மாலை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும், விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினர் மற்றும் கோயில் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

Updated On: 22 April 2024 11:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  3. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  5. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  7. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  9. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  10. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்