நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்

நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்

Namakkal news- நாமக்கல்லில் நடைபெற்ற ரத்த தான முகாமை துவக்கி வைத்து, மாவட்ட கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் அருளரசு ரத்ததானம் வழங்கினார்.

Namakkal news- நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் கூட்டுறவுத் துறை சார்பில் சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது.

Namakkal news, Namakkal news today- நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் கூட்டுறவுத் துறை சார்பில் சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு, அவசர கால பயன்பாட்டுக்கு அரசு ரத்த வங்கி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, நாமக்கல் மாவட்ட அரசு ரத்த வங்கியில் குறைவான எண்ணிக்கையில் ரத்தம் இருப்பு உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் உமாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து, ரெட் கிராஸ் சங்கத்தின் ஒருங்கிணைப்புடன், அனைத்து அரசு துறை அலுவலர்களும், விருப்பமுள்ளவர்கள், தன்னார்வத்துடன் ரத்ததானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில், ரத்த தான முகாம், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் அருளரசு தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து, அவரும் ரத்த தானம் வழங்கினார். நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட கூட்டுறவுத்துறை பணியாளர்கள், தன்னார்வத்துடன் ரத்த தானம் வழங்கினர். அதன் மூலம், மொத்தம் 87 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.

ஏழை மக்களின் உயிர்காக்கும் உன்னத பணியை பாராட்டி, ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் ராஜேஸ்கண்ணன், ரத்த வங்கி மருத்துவர் அன்பு மலர், கூட்டுறவுத் துறை துணை பதிவாளர்கள் ராமசுப்பு, நாகராஜன், ஜேசுதாஸ், ரெட் கிராஸ் நிர்வாகிகள் மாதையன், ஆண்டனி ஜெனித் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story