/* */

அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
X

Erode news- தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை.

Erode News, Erode Today News, Erode Live News - அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தில் விவசாய தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராமம் செலம்பூர் அம்மன் கோவில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகின்றன. இதனால் யானைகள் போன்ற விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகே உள்ள விவசாய நிலங்கள், கிராமப் பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றன.

இந்நிலையில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை எண்ணமங்கலத்துக்கு வந்தது. பின்னர் அந்த யானை அங்குள்ள தோட்டத்துக்குள் புகுந்தது. இதையடுத்து அந்த காட்டு யானை தோட்டத்துக்குள்ளேயே அங்கும் இங்குமாக உலா வந்தது. காட்டு யானையை கண்டதும் அங்கிருந்த விவசாயிகள், வனத்துறையினர் ஒன்று திரண்டு வந்து வனப்பகுதிக்குள் விரட்டினர். எனினும் அந்த காட்டு யானையால், தோட்டத்தில் உள்ள எந்த பயிருக்கும் சேதம் ஏற்படவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 15 May 2024 2:00 AM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...