/* */

கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்

கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
X

காவலர்களுக்கு சன் கிளாஸ் வழங்கிய மாவட்ட எஸ்பி.

திருவண்ணாமலை போக்குவரத்து துறை மற்றும் தமிழ்நாடு அரசின் சட்டம் ஒழுங்கு துறை ஆகியவை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையிடமிருந்து 250 சன் கிளாஸ் களை பெற்றன.

இவைகள் கோடையில் தொடர்ச்சியான சூரிய வெப்பத்தின் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. காவலர்களுக்கு சன் கிளாஸ்களை வழங்கி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பேசுகையில்,

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மேற்கொண்ட இந்த முயற்சியினை பாராட்டுகிறேன்.

ஒரு சன் கிளாஸ் அணிவது பேஷன் என்பதை தவிர சிறந்த சன் கிளாஸ்களை தேர்ந்தெடுப்பதால் அவை கடுமையான சூரிய தாக்கத்திலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. சூரிய கதிர்களில் ஏற்படும் தாக்குதலிலிருந்து நமது போக்குவரத்து காவல்துறையினருக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையினருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மேற்கொண்ட இந்த கவனிக்கத்தக்க நடவடிக்கையை பாராட்டுகிறேன் என்று பேசினார்.

தொடர்ந்து டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளின் தலைவர் டாக்டர் ஐசக் ஆபிரகாம் பேசுகையில் , கண்கள் தம் உடலின் மிக உணர்ந்து திறன் வாய்ந்த உணர்ச்சி உறுப்பு ஆகும். இவை நமது தோலை போலவே சூரிய ஒளிக் கதிர்களினால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு சூரியனின் புற ஊதா கதிர்களை பார்ப்பது மற்றும் கண் எரிச்சல் போன்றவற்றிற்கு வழிவகிக்கிறது.

நாள் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் காவல்துறையினர் வெளியிடங்களில் இருப்பதால் சூரியனிலிருந்து வரும் ஒளியானது கண் அசதி மற்றும் தலைவலியையும் ஏற்படுத்தக் கூடும் நல்ல சன் கிளாஸ்கள் நம் கண்களுக்கு ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்தின் தாக்கத்தை குறைக்கிறது.

கண் கூச்சத்தை தடுக்கிறது மற்றும் கண்களை சுற்றி உள்ள உணர்திறன் பகுதிகளை பாதுகாக்கிறது. சமூகத்தின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் பாதுகாக்க காவல்துறையினர் பாடுபடுவதால் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை எங்களது இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுகிறது என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், டாக்டர் அகர்வால் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், போக்குவரத்துக் காவல் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 May 2024 1:48 AM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...