/* */

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறப்பு: பக்தர்களின் காணிக்கை ரூ. 81.35 லட்சம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டதில், ரூ. 81.35 லட்சம் பக்தர்களின் காணிக்கையாக பெறப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறப்பு: பக்தர்களின் காணிக்கை ரூ. 81.35 லட்சம்
X

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கேயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டதில், ரூ. 81.35 லட்சம் பக்தர்களின் காணிக்கையாக பெறப்பட்டது.

நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் உருவான மலையின் மேற்குப்பகுதியில், அருள்மிகு நாமகிரித்தாயார் உடனுரை நரசிம்மசுவாமி கோயில் குடவறைக் கோயிலாக அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு எதிரில் 18 அடி உயரத்தில் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. மேற்கூரை இல்லாமல் நரசிம்மரை வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் இங்கு இரவு பகல் 24 மணி நேரமும் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்து வருகிறார்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த நவ. 1ம் தேதி கும்பாபிசேக விழா நடைபெற்றது. பின்னர் ஜன. 1ம் தேதி ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு சுமார் 7டன் எடையுள்ள மலர்களால் புஷ்பாஞசலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஜன. 11ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற விழாக்களில் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக அருள்மிகு ஆஞ்சநேயர் சாமி திருக்கோயிலில் 6 உண்டியல்களும், அருள்மிகு நரசிம்ம சாமி திருக்கோயிலில் 4 உண்டியல்களும் என மொத்தம் 10 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த செப். 21ம் தேதி உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இந்த நிலையில் நேற்று 1ம் தேதி மீண்டும் உண்டியல்கள் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனர்கள் நாமக்கல் இளையராஜா, திருச்செங்கோடு ரமணிகாந்தன், ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வசீராளன் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களில் இருந்து வருகை தந்த மாணவர்கள் உண்டியலில் உள்ள காணிக்கைகளை எண்ணும் சேவையில் ஈடுபட்டனர். உண்டியல்களில் மொத்தம் ரூ. 81 லட்சத்து 35 ஆயிரத்து 6006 ரொக்கமாக கணக்கிடப்பட்டது. மேலும் தங்கம் 70 கிராம், வெள்ளி 276 கிராம் ஆகியவையும் பக்தர்களின் காணிக்கையாக பெறப்பட்டது.

Updated On: 2 Feb 2024 2:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி