ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வந்தவாசியில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் டெங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதை எவ்வாறு எதிர்த்து போராடுவது என்பதை மக்களுக்கு விளக்குவதற்காகவும் தேசிய டெங்கு தினம் அனுசரிக்கப்படுகிறது.

வந்தவாசி அரசு போக்குவரத்து பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெங்கு கொசுக்களை கண்டறிவது அதை அழிக்கும் முறைகள் கொசுக்கள் உருவாகாமல் தடுத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் டெங்கு விழிப்புணர்வு தினம் இரும்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன் அறிவுறுத்தலின் பேரில் வட்டார சுகாதார ஆய்வாளர் சீதாபதி தலைமையில் நடைபெற்றது.

அரசு போக்குவரத்து பணிமனை பொறியாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் பேசுகையில் டெங்கு என்பது கொசுவினால் பரவும் வைரஸ் தொற்று. முக்கியமாக வெப்ப மண்டலம் மற்றும் மிக வெப்ப மண்டலம் பகுதியில் எளிதில் பரவும் இது இந்த உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மட்டுமே உள்ளது. பொதுவாக கொசுக்கள் வைரஸ் தொற்று உள்ள ஒருவரை கடிக்கின்றன. இதனால் ஏற்படும் டெங்குவால் அதிக காய்ச்சல் மற்றும் தசை மூட்டு வலி கடுமையான ரத்தப்போக்கு ஆகியவை ஏற்படுகின்றன. டெங்கு உயிருக்கு ஆபத்தானதாக இருந்தாலும் கூட சரியான நேரத்தில் சரியான சிகிச்சை மூலம் டெங்குவை தடுக்கலாம் என சுகாதார ஆய்வாளர் பேசினார்.

விழிப்புணர்வு உறுதிமொழி

பின்னர் வீட்டிலோ வீட்டில் சுற்றுப்புறத்திலோ டயர் தேங்காய் சிரட்டைகள் உடைந்த குடங்கள் உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள் போன்ற பொருட்களை போட மாட்டேன் ,

அவ்வாறு ஏதேனும் வீணான பொருட்கள் கிடந்தாலும் அவற்றை உடனே அகற்றி விடுவேன், எனது வீட்டில் தண்ணீர் சேமிக்கும் இடங்கள் சிமெண்ட் தொட்டிகள் ட்ரம்புகள் ஆகியவற்றை கொசு புகாத வண்ணம் மூடி வைப்பேன்,

வாரம் ஒரு முறை தேய்த்து கழுவி சுத்தம் செய்வேன் இதன் மூலம் கொசுப்புழு வளராமல் தடுப்பேன்,

நான் கற்றுக் கொன்றவற்றை அண்டை அயலாருக்கும் கற்றுக் கொடுத்து டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு உருவாகாமல் பார்த்துக் கொள்வேன்,

தற்பொழுது அரசு எடுத்து வரும் அனைத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் நான் ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று உளமாற உறுதிமொழி கூறுகிறேன் என்ற டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பேருந்து பணிமனை பணியாளர்கள், பொதுமக்கள், கலந்து கொண்டனர்.

Tags

Next Story