/* */

திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள்; முன்னாள் அமைச்சர் பேச்சு

Namakkal news- திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள் என, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

HIGHLIGHTS

திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை  மக்கள் நம்ப மாட்டார்கள்; முன்னாள் அமைச்சர்  பேச்சு
X

Namakkal news- பரமத்திவேலூரில் நடைபெற்ற, அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். அருகில் முன்னாள் அமைச்சர் சரோஜா, எம்எல்ஏ சேகர், நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி ஆகியோர்.

Namakkal news, Namakkal news today- திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள், இந்த தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர் என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

நாமக்கல் லோக்சபா தொகுதியைச் சேர்ந்த, பரமத்திவேலூர் சட்டசபை தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம், எம்எல்ஏ சேகர் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா, நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி கூட்டத்தில் கலந்துகொண்டு, வேட்பாளர் தமிழ்மணியை அறிமுகம் செய்து பேசியதாவது:

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு செய்ததைப் போலவே, அவது மகன் ஸ்டாலின், பேரன் உதயநிதி, கொள்ளுப்பேரன் இன்பநிதி உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு திமுகவினர் குடைபிடித்து வருகின்றனர். தமிழகத்தில் இனி ஒரு குடும்ப கட்சி ஆட்சி செய்வதை தடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் நடபெறும் தவறுகளை எந்த அமைச்சரும் கண்டுகொள்வதில்லை, ஏனென்றால் அமைச்சர்களின் வாரிகளும், ஆட்சியில் பங்கு வகிக்கின்றனர். திமுக என்பது முழுமையான வாரிசுகளின் கட்சியாகும். தமிழகத்தில் திமுக ஆட்சி குறுநில மன்னர்கள் ஆட்சிபோல் நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் அவர்கள் அளித்த பொய்யான வாக்குறுதியை நம்பி, பொதுமக்கள் வாக்களித்துவிட்டனர். இந்த முறை திமுகவின் வாக்குறுதிகளை நம்பி பொதுமக்கள் ஏமாறக் கூடாது.

திமுக அரசின் தவறான கொள்கையால் சிறு குறுந்தொழில்கள், தறிப்பட்டறைகள், ரிக், லாரி போக்குவரத்து உள்ளிட்டவை நலிவடைந்து வருகிறது. 29 கட்சிகள் கூட்டணி சேர்ந்தாலும் அவர்களால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது. நமது வேட்பாளர் தமிழ்மணியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் அனைவரும் கடுமையாக உழைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும். திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக்கூறி 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற அயராது பாடுபட வேண்டும் என அவர் கூறினார்.

முன்னாள் எம்எல்ஏ பொன்சரஸ்வதி, தேமுதிக மாவட்ட செயலாளர் ராமலிங்கம், தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சுபா உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில், அதிமுகவில் இணைந்தனர்.

Updated On: 27 March 2024 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  4. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  5. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  7. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  8. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!