/* */

நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!

பகவதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினர்.

HIGHLIGHTS

நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
X

நத்தம் பகவதி அம்மன் ஆலயத்தில் பகுதியில் விழா தொடங்கியது.

நத்தம் :

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அசோக்நகர் பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா , கொடியேற்றத்துடன் தொடங்கியது. கணபதி ஹோமம் நடந்ததை தொடர்ந்து, கன்னிமார் தீர்த்தம் எடுத்து சந்தனக் கருப்பு கோயிலை வந்தடைந்த பக்தர்களை மேளதாளம் முழங்க அதிர்வேட்டு, வர்ணக் குடை, தீவட்டி பரிவாரங்களுடன் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ,பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினர்.

இதையொட்டி ,10 நாட்கள் விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 21ந்தேதி பக்தர்கள் சந்தனக்குடம், பால்குடம், அக்கினிச்சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், மாலையில் முளைப் பாரி ஊர்வலம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் காரணக்காரர்கள், விழாக்குழுவினர், அசோக்நகர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

செய்தி ஒரு கண்ணோட்டம் :

நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் கோவில் வைகாசித் திருவிழா கோலாகலம்!

 • நம்ம ஊரு நத்தம் அசோக் நகர் பகுதியில இருக்கிற பகவதி அம்மன் கோவிலில் வைகாசித் திருவிழா வெகு விமரிசையா கொடியேற்றத்துடன் ஆரம்பிச்சிருச்சு.
 • முதல்ல கணபதி ஹோமம் நடந்து, அதுக்கு அப்புறம் கன்னிமார் தீர்த்தம் எடுத்துக்கிட்டு பக்தர்கள் எல்லாரும் சந்தனக் கருப்பு கோவிலுக்கு போயிட்டு அங்க இருந்து மேளதாளம் முழங்க பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தாங்க. கோவிலுக்கு வந்த பக்தர்கள் எல்லாரும் காப்பு கட்டி விரதத்தை ஆரம்பிச்சாங்க.
 • இந்த பத்து நாள் திருவிழாவில ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விதவிதமா அபிஷேக ஆராதனைகள், அலங்காரங்கள் எல்லாம் நடக்கப் போகுது. 21-ம் தேதி சந்தனக் குடம், பால்குடம், அக்னிச்சட்டி எடுத்துட்டு பக்தர்கள் ஊர்வலமா வர்றது தான் இந்த விழாவுடைய முக்கியமான நிகழ்ச்சி. மாலையில முளைப்பாரி ஊர்வலமும் நடக்கும்.
 • இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், அசோக் நகர் மக்கள் எல்லாரும் சேர்ந்து செஞ்சுட்டு இருக்காங்க.
Updated On: 15 May 2024 9:31 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  என்னை தாண்டி தொட்டுப்பார்...! பிரதமர் மோடி ஆவேசம்....!
 2. தேனி
  விபத்தில் அதிபர் மரணம்...இனி என்ன ஆகும் ஈரான்?
 3. திருத்தணி
  முருகன் கோவிலில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம்!
 4. திருவள்ளூர்
  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு!
 5. பொன்னேரி
  பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
 6. மாதவரம்
  பாடியநல்லூரில் புத்த பூர்ணிமா விழா
 7. ஈரோடு
  கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
 8. கலசப்பாக்கம்
  விவசாயிகள் நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தை முற்றுகை
 9. கும்மிடிப்பூண்டி
  பெரியபாளையத்தில் 108 பெண்கள் பால்குடம் ஊர்வலம்
 10. திருவண்ணாமலை
  கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாட வேண்டும் - அமைச்சர் வேலு!