சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
X
பள்ளிப்பட்டு அருகே சரக்கு வாகனத்தை வை மறைத்து ஓட்டுநரை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருத்தணி அருகே சரக்கு வாகனத்தை வழிமறித்து கத்தியால் ஓட்டுநரை மூன்று இடங்களில் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே நாதன்குளம் என்ற பகுதியில் பள்ளிப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்தில் இருந்து அத்திமஞ்சேரிக்கு வாழைப்பழம் சரக்கு ஏற்றுக் கொண்டு சிறிய வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தை ஓட்டுநர் அப்துல் ரகுமான்( வயது 68) என்பவர் ஓட்டி வந்தார். நாதன் குளம் என்ற பகுதியில் வாகனம் வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த வழிப்பறி மர்ம கும்பல் ஒன்று திடீரென வாகனத்தை வழிமறித்து ஓட்டுனரை கீழே இறக்கி அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்துல் ரகுமானை மூன்று இடங்களில் வெட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அவர் தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்று தெரிவித்த நிலையில் மீண்டும் கத்தியால் தாக்கி அவரிடம் இருந்த ரூபாய் 300 ஐ பறித்துக் கொண்டு அங்கிருந்து அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றனர்.

இதுகுறித்து அளித்த தகவலின் பெயரில் ஆர்.கே. பேட்டை போலீசார் விசாரணை செய்ததில் ஓட்டுநர் அத்திமஞ்சேரி பகுதியில் வாழைப்பழம் மொத்த வியாபாரம் செய்து வருபவர் மணி என்பவரிடம் சிறிய சரக்கு வாகனத்தை அப்துல் ரகுமான் ஓட்டுனராக பணியாற்றி வருவதாகவும், காஞ்சிபுரத்தில் வாழைப்பழம் லோடு இறக்கிவிட்டு மீண்டும் அத்திமஞ்சேரி நோக்கி திரும்பும் பொழுது நாதன் குளம் பகுதியில் வழிப்பறி கொள்ளையர்கள் அப்துல் ரகுமானை வெட்டி பணம் கேட்டு மிரட்டி வெட்டியதில் காயம் அடைந்தது தெரியவந்தது.

அப்துல் ரகுமான் திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஆர்கே பேட்டை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில். சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (வயது 19) என்பவரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாகியுள்ள மற்றொரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சஞ்சய் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
ai products for business