/* */

உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!

சோழவந்தானில் உலக நலம் பெற வேண்டியும் தமிழகத்தில் போதுமான மழை பெய்ய வேண்டியும் வேண்டி யாக பூஜகள் நடந்தன.

HIGHLIGHTS

உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
X

மதுரை மாவட்டம் ,சோழவந்தானில் நடைபெற்ற யாக வேள்வி.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஒற்றை அக்ரஹாரத்தில் அமைந்துள்ள, ஶ்ரீ மலையாளம் ஶ்ரீ கிருஷ்ணையர் வேத சாஸ்திர பாடக சாலையில், உலக நன்மைக்காகவும் தமிழகத்தில் போதுமான மழை பெய்யவேண்டியும்,பாடசாலை அத்யாபகர் ஶ்ரீ வெ. வரதராஜ பண்டிட் , தலைமையில் பல வேத விற்பன்னர்களாலும் மற்றும், வேத பாடசாலை வித்யார்த்திகளாலும் அதி விமர்சையாக நடைபெற்றது.

மேற்படி, வைபவம் லோக ஷேமத்திற்காகவும், மழை வேண்டியும் குருவின் அருளால் அனைவரும் நலமாக இருக்க வேண்டியும்,அன்று காலை 7.05 க்கு மேல் குரு வந்தனம், விக்னேஷ்வரர் பூஜை, புண்யாகவாசனம், ஶ்ரீ சங்கர பகவத் பாதாச்சார்யர் க்ராம ஊர்வலம், சங்கர பகவத் பாதர் த்யான ஆவாஹன சோடஷ உபசாரங்கள், சங்கர பகவத் பாத அஷ்டோத்திரம், மகன்யாச ருத்ர ஜெபம், உபநிஷத் பாரயணங்கள், அதனைத் தொடர்ந்து, கணபதி ஹோமமும் நடந்தது.

கணபதி ஹோமத்தில் ருத்ர ஹோமம், ம்ருத்யுஞ்சய ஹோமம், சொத்தாரா ஹோமம், மஹா பூர்நாஹுதி, சங்கர பகவத் பாத புணர் அர்ச்சனை, மஹா தீபாராதனை, மந்த்ர புஷ்பம், சதுர் வேத பாராயணம்,திராவிட வேதம், ஸ்தோத்ர பாராயணம்,தட்சிணா மூர்த்தி அஷ்டகம், தோடகாஷ்டகம், சங்கர பகவத் பாத பிக்ஷா வந்தனம், மஹா தீபாராதனை, மற்றும் பிரசாதம் வழங்குதல் போன்றவை நடைபெற்றது. இந்த யாகத்தில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 15 May 2024 9:49 AM GMT

Related News

Latest News

 1. பொன்னேரி
  பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
 2. கலசப்பாக்கம்
  விவசாயிகள் நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தை முற்றுகை
 3. திருவண்ணாமலை
  கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாட வேண்டும் - அமைச்சர் வேலு!
 4. தேனி
  உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த வழி எது?
 5. செங்கம்
  செங்கம் பகுதியில் நெல் மணிலா பயிர்கள் சேதம்!
 6. நாமக்கல்
  அரசுப் பள்ளிகளில் இன்று இ-சேவை மையம்!
 7. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 8. கோவை மாநகர்
  மின்சாரம் தாக்கி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
 9. வீடியோ
  🔴 LIVE : அந்த நடிகர் யாருன்னே தெரியாது! எல் முருகன் பத்திரிக்கையாளர்...
 10. திருவண்ணாமலை
  ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்: கூடுதல் ரயில்கள் இயக்க பக்தர்கள்...