/* */

சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடந்தது.

HIGHLIGHTS

சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
X

திரௌபதி அம்மன் ஆலயத்தில், நடந்த திருக்கல்யாண விழா.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதன்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, முன்னிட்டு மேளதாளத்துடன் வடக்கு ரதவீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் சுகுமாரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர்.

பிரசாத் சர்மா தலைமையில் திருக்கல்யாண யாகபூஜை நடந்தது. பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி ஆகியோர் மாப்பிள்ளை விட்டார், பெண்வீட்டாராக இருந்து திருமணத்தை நடத்தி வைத்தனர். அனைவருக்கும் முன்னாள் நிர்வாக பரம்பரை அறங்காவலர் ஆதிமூலம்பிள்ளை குடும்பத்தினர் சார்பாக, திருமாங்கல்ய பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் எம். கே. முருகேசன், கமிட்டி செயலாளர் ஆதி பெருமாள், மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர் விஜயகுமார், நகர கூட்டுறவு வங்கி பொது மேலாளர் வீரணன், முத்துக்குமரன் நகை மாளிகை உரிமையாளர் இருளப்பன் என்ற ராஜா, பைனான்சியர் முத்துராமன்மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாலையில் திருவிளக்கு பூஜையும் இரவு அம்மனும் சுவாமியும், யானை வானத்தில் எழுந்தருளி கண்ணப்பர் ஒயிலாட்ட குழுவினருடன் வீதி உலாவும் நடைபெறும். உபயதார் செந்தில் என்ற தில்லை சிதம்பரம் பிரசாதம் வழங்கினார். சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் சுகாதார பணி மற்றும் கூடுதலாக தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி செய்து இருந்தனர். நாளை மாலை சக்கரக்கோட்டை சைந்தவன் வதம், வெள்ளிக்கிழமை கருப்பட்டியில் பீமன் கீசகன், வருகிற சனிக்கிழமை சோழவந்தானில் பீமன் கீசகன் வதம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர் செய்து வருகின்றனர்.

Updated On: 15 May 2024 9:40 AM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...