/* */

வீடுகளை காலி செய்ய அனுப்பப்பட்ட கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது

வீடுகளை காலி செய்ய அனுப்பப்பட்ட கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என போளூர் களியம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் மனு

HIGHLIGHTS

வீடுகளை காலி செய்ய அனுப்பப்பட்ட கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது
X

போளூர் தாலுகா களியம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

வீடுகளை காலி செய்ய அனுப்பப்பட்ட கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று போளூர் தாலுகாவில் உள்ள களியம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

போளூர் தாலுகா களியம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் 89 கான்கிரீட் வீடுகள் உள்ளன. நாங்கள் 3 தலைமுறையாக அந்த பகுதியில் வசித்து வருகின்றோம். தற்போது நாங்கள் இருக்கும் பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதி என்று கூறி எங்கள் வீடுகளை காலி செய்ய அரசு தரப்பில் கடிதம் வழங்கப்பட்டு உள்ளது.

எங்கள் குடும்பத்தினர் யாரும் அரசு வேலையிலோ, நிரந்தர ஊதிய பணியிலோ இல்லை. அனைவரும் கூலி தொழில் தான் செய்து வருகின்றோம். எங்களால் வேறு இடத்தில் வீடு கட்டவோ, குடிபெயர்ந்து செல்லவோ வசதியில்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றோம்.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும், அரசின் சொத்துக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி வசித்து வருகின்றோம். எனவே வீடுகளை காலி செய்ய அனுப்பப்பட்ட கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று அவர்கள் கூறினர்.

Updated On: 8 March 2022 6:03 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு