செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
X

தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த அதிகாரிகள்.

செய்யாற்றில் தனியார் பள்ளி பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியாா் பள்ளிகளின் பேருந்து மற்றும் இதர வாகனங்களுக்கு கூட்டாய்வு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றிச்செலும் பஸ்கள், வேன் உள்ளிட்ட வாகனங்களின் பாதுகாப்பு உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணிகள் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் மூலம் செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

செய்யாறு வட்டங்களைச் சோ்ந்த 3 வட்டங்களில் 36 தனியாா் பள்ளிகளில் மொத்தம் 228 வாகனங்கள் உள்ளன. முதல் கட்டமாக 125 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா தலைமையில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் பஸ், வேன்கள் ஆய்வு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் போது, பள்ளி வாகனங்களில் மஞ்சள் கலர், ஒளிரும் ஸ்டிக்கர், மாணவர்களுக்கு வசதியான படிகள், வேகக்கட்டுப்பாட்டு கருவி, அவசர வழி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா?, முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் உள்ளனவா என விதிமுறைகள் குறித்து அனைத்து பஸ்களையும் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து, குறைபாடுகளை சுட்டிகாட்டி, குறைகளை சரிசெய்ய உத்தரவிட்டார். மேலும், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தபோது, பஸ்களில் அனுபவமுள்ள டிரைவர்களை வரவழைத்து. அவர்களின் அனுபவம், வயது, ஓட்டுனர் உரிமம் உள்ளதா என கேட்டறிந்தார்.

அப்போது, பள்ளி வாகனங்களில் செயல்படாத கேமராக்கள், மாணவா்கள் அமரும் சரியில்லாத இருக்கைகள், சேதமடைந்த வாகனத்தின் தரைதளம் உள்ளிட்ட குறைகள் இருந்த 19 பள்ளி வாகனங்களை சரி செய்து கொண்டு வர திருப்பி அனுப்பினா்.

தொடர்ந்து, தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு தீயணைப்பு நிலை அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் பஸ், வேன்களில் தீ விபத்துகள் ஏற்பட்டால் தீயை அனைப்பது, தீ விபத்துகள் ஏற்படாமல் தடுப்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன், செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் கருணாநிதி, காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகன்டன் போக்குவரத்து, வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் பள்ளி ஓட்டுனர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story
ai solutions for small business