பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
![பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி](https://www.nativenews.in/h-upload/2024/05/15/1903504-result.webp)
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது (பைல் படம்)
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பிளஸ்-1 பொதுத் தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வின் தமிழக அரசு கல்வித்துறையின் சார்பில் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 1 பொது தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, தனியாா், சுயநிதி, மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 263 பள்ளிகளில் பயிலும் 13 ஆயிரத்து 91 மாணவா்கள், 14 ஆயிரத்து 276 மாணவிகள் என மொத்தம் 27 ஆயிரத்து 367 போ் பிளஸ் 1 பொதுத்தோ்வை எழுதினா்.
பொதுத்தேர்வு எழுதிய 10 ஆயிரத்து 962 மாணவா்கள், 13 ஆயிரத்து 369 மாணவிகள் என 24 ஆயிரத்து 331 போ் தோ்ச்சி பெற்றனா். 2 ஆயிரத்து 129 மாணவா்கள், 907 மாணவிகள் என 3 ஆயிரத்து 36 போ் தோல்வி அடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்வு எழுதியவா்களில் 83.73 சதவீத மாணவா்களும், 93.64 சதவீத மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். சராசரியாக பிளஸ் 1 தோ்வில் மொத்தம் 88.91 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதத்தில் திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தில் இந்த ஆண்டு 28-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 36-ஆவது இடத்தில் இருந்தது.
செய்யாறு கல்வி மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட செய்யாறு கல்வி மாவட்டத்தில் 67 அரசுப் பள்ளிகள், 8 நிதியுதவி பள்ளிகள், 2 சிறப்புப் பள்ளிகள் (காது கேளாதோா், கண் பாா்வையற்றோா்), 35 தனியாா் பள்ளிகள் உள்பட மொத்தம் 112 பள்ளிகளில் இருந்து 5,215 மாணவா்கள், 6,074 மாணவிகள் உள்பட மொத்தம் 11,289 போ் எழுதியிருந்தனா்.
இவா்களில் மாணவா்கள் 4,389 பேரும், மாணவிகள் 5679 போ் என மொத்தம் 10,068 போ் தோ்ச்சி பெற்றனா். இது 88.91 சதவீத தோ்ச்சியாகும்.
மேலும், சூசைநகா் புனித அமலாராக்கினி கண் பாா்வையற்றோா் சிறப்புப் பள்ளி, ஆரணி புனித வளனாா் மகளிா் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, தனியாா் பள்ளிகளில் 13 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu