Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

அனைத்து ராசியினருக்கான இன்றைய மே 15 புதன்கிழமை ராசிபலன்கள்

இன்று குரோதி - வைகாசி 2 - மே 15 - புதன்

நல்ல நேரம்: காலை 9.30 - 10.30; மாலை 4.30 - 5.30

திதி: வளர்பிறை சப்தமி; காலை 7.40 பிறகு அஷ்டமி

நட்சத்திரம்: ஆயில்யம்; மாலை 6.12 பிறகு மகம்

யோகம்: சித்தயோகம் முழுவதும்

வார சூலை: வடக்கு

குளிகை: காலை 10.30 - 12.00

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்

சூரிய உதயம்: காலை 5.54 அஸ்தமனம்: இன்று மாலை 6.31

தினப்பலன்

மேஷம் : அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்: மகிழ்ச்சி அதிகரிக்கும். எல்லா விஷயத்திலும் துணிச்சலாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பரணிக்கு திடீர் பணவரவு உண்டு.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2ம் பாதம்: எல்லாவித குழப்பங்களுக்கும் முடிவு உண்டு. கார்த்திகைக்கு செலவுகள் குறையும். ரோகிணியின் வாரிசுகளுக்கு சுபகாரியம் முடிவாகும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3பாதம்: எல்லாரின் பாராட்டும் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். புனர்பூசத்துக்கு நண்பர்களுடன் பயணம் ஏற்படும்.

கடகம் : புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்: உறவுகள் மூலம் சுபகாரிய செய்தி கிடைக்கும். பூசத்துக்கு பல நாட்களாக பிரச்னை கொடுத்துவந்த சொத்து வில்லங்கம் முடிவுக்கு வரும்.

சிம்மம் : மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்: கடன் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். மகத்துக்கு தாராள வரவு உண்டு. பூரத்துக்கு அனாவசிய செலவுகள் திடீரென்று குறையும்.

கன்னி: உத்திரம்2,3,4ம் பாதம், அஸ்தம்,சித்திரை 1ம் பாதம்:பொருளாதார கஷ்டம் தீரும். தொழில் போட்டிகள் மறையும். சித்திரையினரின் குடும்பத்தில் நிலவும் மனஸ்தாபங்கள் காணாமல் போகும்.

துலாம்: சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்: உறவுகள் ரீதியான சங்கடங்கள் விலகும். ஒட்டுமொத்த பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். விசாகத்துக்கு பதவி உயர்வு தேடி வரும்.

விருச்சிகம் : விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை: நீடித்துவரும் ச ங்கடங்களுக்கு தீர்வு கிடைக்கும். கேட்டை பெண்கள் திடீரென்று உயர்தர ஆபரணச் சேர்க்கைக்கு ஆளாவர்.

தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்: எதிலும் நிதானம் தேவை. உறவினர் வருகையால் மகிழ்ச்சி காத்திருக்கிறது. பூராடத்தினரின் தேவையற்ற சஞ்சலங்கள் தீரும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ம்பாதம்: மீள முடியாத சங்கடங்களில் இருந்து வெளிவருவீர்கள். உத்திராடத்தினரின் கடன் தொல்வை நீங்கும். திருவோணத்துக்கு பணவரவு.

கும்பம் : அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்: கொடுக்கல் வாங்கல் ரீதியான கஷ்டங்கள் விலகும். எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். தடைபட்ட பயணங்கள் நிறைவேறும்.

மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி: அதிர்ஷ்டமான நாள். உத்திராடத்தினர் உயர்தர உடைமைகளை பத்திரமாக கையாள வேண்டும். ரேவதிக்கு இடமாற்றம் ஏற்படலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!