தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்

பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்.

தமிழக வெற்றிக்கழகம் சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புதிய பேருந்து நிலையம் இணைப்பு சாலை பகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். வந்தவாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுமன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழக ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

கோடையின் தாக்கத்தை பொதுமக்கள் சமாளிக்கும் வகையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அமைக்கப்பட்ட பந்தலில் பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர், குளிர்பானங்கள், வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர், வாழைப்பழங்கள், சுத்தமான குடிநீர், வழங்கப்பட்டன.

தெள்ளார் ஒன்றிய தலைவர் பரமசிவன், வந்தவாசி ஒன்றிய பொறுப்பாளர் வினோத்குமார், வந்தவாசி ஒன்றிய தலைவர் முகமது ஷபி, நகர செயலாளர் ராஜேஷ், வந்தவாசி ஒன்றிய செயலாளர் சகாதேவன் ஒன்றிய ஆலோசகர் மோகனசுந்தரம் , உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அன்னையர் தின கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பெரணமல்லூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் திருமலை தலைமை தாங்கினார்.

இளைஞர் அணி செயலாளர் சுமன் கிளைச் செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெரணமல்லூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பேசுகையில்

வந்தவாசி கிளை சார்பில் கடந்த 11 வாரங்களாக கோடை வெப்பத்திலிருந்து மக்களை தற்காக்கும் பொருட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் தினமும் 250 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர், குளிர்பானங்கள், வெள்ளரிக்காய், நொங்கு, இளநீ, ர் வாழைப்பழம், பழச்சாறுகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு கூடுதலாக பால், முட்டை, ரொட்டியும் வழங்கப்பட்டது என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தெள்ளார் ஒன்றிய தலைவர் பரமசிவன், வந்தவாசி ஒன்றிய பொறுப்பாளர் வினோத்குமார், வந்தவாசி ஒன்றிய தலைவர் முகமது ஷபி , உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story