/* */

நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசின் நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர்

திருவண்ணாமலை தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாநில செயலாளர் சேகர் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார் மாவட்ட பொருளாளர் ஜெய்சங்கர் அனைவரையும் வரவேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருளாக பொட்டலமாக வழங்க வேண்டும், சரியான எடையில் அத்தியாவசிய பொருட்களை இறக்காமல் அபராதம் விதிக்கும் சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும், அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகளில் எடை தராசு மற்றும் பணியாளர்கள் வரவேண்டும்.

நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை இறக்குவதற்கு கட்டாய இறக்கு கூலி வசூலிப்பதை தடுக்கப்பட வேண்டும், இருப்பு அதிகமாக இருந்தால் அபராதம் விதிப்பதை கைவிட்டு பழைய நடைமுறையை சேர்த்துக் கொள்ள வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் அண்ணாமலை , மாவட்ட துணை தலைவர்கள் தனசேகரன் , அன்பரசன், மாவட்ட பொதுக்குழு ஒருங்கிணைப்பாளர் மகாதேவன் மற்றும் வட்ட ஒன்றிய நிர்வாகிகள் , நியாய விலை கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்

அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டார தலைவர் பிச்சாண்டி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி செயலாளர் சந்தோசத்தின் அரசு ஊழியர் விரோத போக்கை கண்டித்தும் தமிழக அரசு அவரை திரும்ப பெறவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 May 2024 1:12 AM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...