சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்

சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்

Namakkal news- மோகனூர் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது (மாதிரி படம்)

Namakkal news- மோகனூர் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ததால், மின் கம்பம் முறிந்து ஒரு கிராமமே இருளில் மூழ்கியது.

Namakkal news, Namakkal news today- மோகனூர் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ததால், மின் கம்பம் முறிந்து ஒரு கிராமம் இருளில் மூழ்கியது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் இருந்ததால், பகல் நேர வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாகியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் துவங்கியதும் வெயில் அதிகமானது. ஆனால் மாலை நேரத்தில் கோடை மழை பெய்யத்துவங்கியுள்ளது.

மோகனூர் பகுதியில், சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது. இதனால், மணியங்களிப்பட்டி புதுக்காலனியில், உயர் அழுத்த மின் கம்பம் முறிந்து விழுந்தது. அதைத்தொடர்ந்து, அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டு, கிராமமமே இருளில் மூழ்கியது. இரவு நேரத்தில் மின்சாரத்தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் வீடுகளுக்குள் தூங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். புழுக்கத்தாலும், கொசுக் கடியாலும், தூக்கம் இன்றி இரவு முழுவதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மின்வாரிய அலுவலர்கள், முறிந்த மின் கம்பத்தை மாற்றி, புதிய உயர் அழுத்த மின் கம்பத்தை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, புதிய மின் கம்பம் அமைக்கப்பட்டது. அதையடுத்து, 25 மணி நேரத்துக்கு பின், அடுத்த நாள் இரவு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. மீண்டும் மின்சார விநியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

Tags

Next Story