/* */

வாடகை பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல்

திருவண்ணாமலையில் வாடகை பாக்கி செலுத்தாத 5 நகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

வாடகை பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல்
X

வாடகை பாக்கி செலுத்தாத 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகத்தின் கீழ் மத்திய பேருந்து நிலையம், ஜோதி பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் 388 கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் கடை வைத்திருக்கும் சிலர் வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். ரூ.11 கோடியே 14 லட்சத்து 71 ஆயிரம் கடை வாடகை பணம் நிலுவையில் உள்ளது.

வாடகை பாக்கியுள்ள கடைகளுக்கு நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பாக்கி பணத்தை உடனடியாக செலுத்த கோரி நோட்டீசு வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.97 லட்சத்து 99 ஆயிரம் வசூலானது. மீதமுள்ள ரூ.10 கோடியே 14 லட்சத்து 72 ஆயிரத்தை வசூல் செய்யும் பணியில் நகராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பல வருடங்களாக வாடகை பாக்கி செலுத்தாத திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள 2 கடைகள் மற்றும் ஜோதி பூ மார்க்கெட்டில் உள்ள 3 கடைகளுக்கு நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர். அப்போது ஜோதி மார்க்கெட்டில் இருந்த வியாபாரிகள் சிலர் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாடகை பாக்கி செலுத்தாத வியாபாரிகள் உடனடியாக வாடகை பாக்கியை செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறினர்

Updated On: 10 Sep 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  2. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  4. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  5. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  7. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  8. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  9. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  10. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...