/* */

நாமக்கல் அருகே அடகு வைத்த நகைகளை மீட்க முடியாத விரக்தி: பெண் தற்கொலை

அடகு வைத்த நகையை மீட்க முடியாதென்ற விரக்தியில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே அடகு வைத்த நகைகளை மீட்க முடியாத விரக்தி: பெண் தற்கொலை
X

நாமக்கல்:

நாமக்கல் அருகே அடகு வைத்த நகைகளை மீட்க முடியாக விரக்தியால் பெண் தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல் அடுத்துள்ள சாலப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). டூ வீலர் மெக்கானிக் . இவரது மனைவி அங்கம்மாள் (39). இந்த தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தை, வட்டிக்கு கொடுத்து வந்தனர். அங்கம்மாள் தனது 15 பவுன் தங்க நகையை பேங்கில் அடகு வைத்து கடன் வாங்கியுள்ளார்.

அந்த கடனை அடைத்து நகையை திருப்பி பெற முடியவில்லை. இதற்காக வட்டிக்கு கடன் கொடுத்தவர்களிடம் பணத்தை திரும்பக்கேட்டுள்ளார். கடன் பெற்றவர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் நகையை திருப்ப முடியாமல் போய் விடுமோ என்ற விரக்தியில் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அங்கம்மாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 April 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  4. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  5. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  6. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  7. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  8. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  9. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்