/* */

நாமக்கல்லில் 2 மாதங்களுக்கு பிறகு துவங்கிய போக்குவரத்து சேவை - பயணிகள் இல்லாமல் பஸ்கள் 'காலி'

கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதால், நாமக்கல் மாவட்டத்தில் இன்று பஸ் போக்குவரத்து துவங்கியது. பயணிகள் வராததால், பல பஸ்கள் காலியாக சென்றன.

HIGHLIGHTS

நாமக்கல் உள்ளிட்ட11 மாவட்டங்களில், இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி இரு மாதங்களுக்கு பிறகு, இன்று பஸ் போக்குவரத்து துவங்கியது. நாமக்கல் பஸ் நிலையத்திற்கு அதிகாலையிலேயே அரசு பஸ்கள் வரத் துவங்கின.

இரண்டு மாதங்களாக பஸ் போக்குரவத்த இல்லதாததால் அரசு வேலைக்குச் செல்வோர், தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோர், கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்டோர் டூ வீலர்களில் வேலைக்குச் சென்று பழகிவிட்டனர். இதனால் உள்ளூர் பஸ்களில் பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. பல பஸ்கள் காலியாகச் சென்றன.

நாமக்கல் - திருச்சி, நாமக்கல் சேலம், நாமக்கல் - மதுரை, நாமக்கல் - ஈரோடு ஆகிய வெளியூர் பஸ்களில் மட்டும் சுமார் 50 சதவீதம் வரை பயணிகள் சென்றனர். குறைவான பயணிகள் வந்தால் கட்டுபடியாகாது என்ற நோக்கத்தில் ஒருசில தனியார் பஸ்களைத் தவிர, மற்ற தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. டாக்சிகள், ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்கள் ஓவடின.

ஹோட்டல்கள், டீக்கடைகள் பேக்கரிகளில் வாடிக்கையாள்கள் 50 சதவீதம் பேர் கடைக்குள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டனர். ஜவுளிக்டைகள், ரெடிமேட் கடைகள் மற்றும் நகைக்கடைகள் 2 மாதங்களுக்கு பிறகு திறக்கிப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் இந்த கடைகளுக்கு வந்திருந்தனர்.

மளிகைக்கடைகள், எலக்ட்ரிக்கல் ஹார்டுவேர் கடைகள், ஆட்டோமொபைல் கடைகள், லாரிப்பட்டறைகள், ஸ்டேஷனரி கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 9 மணிக்கே திறக்கப்பட்டன. வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் திறக்கப்படலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனால், பிரசித்தி பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், ஸ்ரீ நரசிம்மர்சாமி திருக்கோயில்கள், காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டன. இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக கோயில்களில் பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதால் பல கடைகளில் கூட்டம் அலை மோதியது. போலீசாரும், நகராட்சி அலுவலர்களும் முக்கிய வீதிகளில் ரோந்து சென்றனர். சமூக இடைவெளியை மீறி அதிக கூட்டம் இருந்த கடைகளை மூடி சீல் வைத்தனர்; ஒருசில கடைகளுக்கு அபராதம் விதித்தனர். நாமக்கல் மணிக்கூண்டு, மெயின்ரோடு, சேலம் ரோடு, கோட்டை ரோடு உள்ளிட்டபகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டனர்.

Updated On: 5 July 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  2. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  3. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  4. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  5. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  6. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  9. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை