கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
பைல் படம்
கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் பத்தாம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த பொல குணம், அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த 31 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் .
இதில் முதலிடம் பெற்ற மாணவி குணமதி 458 மதிப்பெண்களும், இரண்டாம் இடம் பெற்ற கார்த்திகா 437 மதிப்பெண்களும், மூன்றாம் இடம் பெற்ற மாணவி தீபா 432 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
இத்தகவலை பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன் தெரிவித்தார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகன், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வாழ்த்தி பாராட்டுகளை தெரிவித்தனர்.
கருங்காலி குப்பம் ராம ரெட்டியார் உயர்நிலைப் பள்ளி
இதேபோன்று கருங்காலி குப்பம் ராம ரெட்டியார் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மொத்த 37 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர் .
இதேபோன்று கருங்காலி குப்பம் ராம ரெட்டியார் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மொத்த 37 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் முதலிடம் பெற்ற மாணவர் லிங்கேஸ்வரன் 441 மதிப்பெண்களும், இரண்டாம் இடம் பெற்ற மாணவி காந்தி 440 மதிப்பெண்களும், மூன்றாம் இடம் பிடித்த மாணவி ஸ்ரீமதி 400 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
இத்தகவலை பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
முதல் மூன்று இடங்களை பிடிக்க மாணவ மாணவியர்களை பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் , பொதுமக்கள் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
பெரணமல்லூர்
பெரணமல்லூர் அருகே தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை அளித்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்தார்.
பெரணமல்லூர் அடுத்த அல்லியந்தல் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாலவன் தலைமை தாங்கினார். பிடிஏ தலைவர் முனியன், பள்ளி மேலாண்மை குழு தலைவி ஜெயதேவி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் குபேந்திரன் வரவேற்றார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த பள்ளி 100சதவீதம் தேர்ச்சி பெற்றது குறித்து பாடம் எடுத்த ஆசிரியர் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கூலி தொழிலாளி மகன் விஜயனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu