தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!

தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
X

பைல் படம்

தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிலோ 1100 ரூபாயினை தாண்டி விற்பனையாகிறது

தேனி மாவட்டம் விவசாய சார்ந்த மாவட்டமாக இருந்தாலும், ஆடு, மாடு வளர்ப்போர் எண்ணிக்கை மிக, மிக குறைவு. இதனால் தேனி மாவட்டத்தின் இறைச்சி தேவைக்கு வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து இறைச்சி வாங்கி வருகின்றனர். வியாபாரிகள் பெரும்பாலும் உயிருடன் ஒரு கிலோ 300 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்குகின்றனர். வெள்ளாடு, அதிலும் வெள்ளாட்டு கிடா என்றால் சில இடங்களில் மட்டும் கிலோ 350 ரூபாய்க்கு வாங்குகின்றனர்.

இதனை கொண்டு வரும் செலவு, பராமரிப்பு செலவு, அறுத்ததும் தோல் கழிவு, இதர கழிவுகள் போக தனிக்கறியினை கிலோ 1100 ரூபாய்க்கும், எலும்பு கறியினை 900ம் ரூபாய்க்கும் விற்கின்றனர். ஆட்டின் அனைத்து உறுப்புகளையும் கலந்து கூறு கறி என விற்பனை செய்வார்கள். இப்படி விற்பனை செய்யும் கூறு கறியின் விலை கிலோ 600ல் இருந்து கிலோ 700 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிண்ணம் ஆட்டு ரத்தம் 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு ஆட்டில் தண்ணீர், உப்பு கலந்து இரண்டு கிண்ணம் ரத்தம் பிடிப்பார்கள்.

அதேபோல் ஆட்டின் இதர பாகங்களான ஒரு நுரையீரல் 150 ரூபாய்க்கும், ஒரு கிலோ குடல் 400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தலை, கால் அளவினை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுகிறது.

இந்த விலை உயர்வு அதிகம் என்றாலும், ஆட்டின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் வளர்ப்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது. எனவே எதிர்காலத்தில் இன்னும் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் தான் உள்ளது. குறைய வாய்ப்பு இல்லை என இறைச்சிக் கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
why is ai important to the future