பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
கொள்ளை நடைபெற்ற கோவில்.
பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து 4வது முறையாக கொள்ளை நடந்தது. 4கிராம் தங்கம் 10ஆயிரம் பணம் கொள்ளை போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த எடக்குப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த கிராம தேவதையான நூக்காளம்மன் கோவில் அமைந்து உள்ளது. நேற்று இரவு கோவிலை வழக்கம் போல பூட்டிவிட்டு இன்று காலை பூஜை செய்ய வந்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்தார். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த 2கிராம் தங்க பொட்டு, பீரோவில் இருந்த 2கிராம் தங்கம் என் 4கிராம் தங்கம், சுமார் 10000ரூபாய் உண்டியல் பணம் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே கோவிலில் 4வது முறையாக தொடர்ந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu