ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
X

தாளவாடியில் பெய்த மழை.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மி.மீ மழையளவு பதிவானது. அதிகபட்சமாக தாளவாடியில் 56 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மி.மீ மழையளவு பதிவானது. அதிகபட்சமாக தாளவாடியில் 56 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக வருண பகவானின் கருணையினால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே சற்று பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தாளவாடி பகுதியில் நேற்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. மதியம் 2 மணியளவில் வானில் கருமேகக் கூட்டங்கள் திரண்டது. பின்னர், சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

இதேபோல், பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 3.30 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாவட்டத்தில் நேற்று (மே.11) சனிக்கிழமை காலை 8 மணி முதல் இன்று (மே.12) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேர நிலவரப்படி பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

தாளவாடி - 56.00 மி.மீ,

பவானி - 22 மி‌.மீ,

அம்மாபேட்டை - 5.6 மி.மீ,

மாவட்டத்தில் மொத்தமாக 83.6 மி.மீ ஆகவும், சராசரியாக 4.92 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

Tags

Next Story
மனித நலன் முதல் வணிக வெற்றிவரை சிறப்பாக செயல்படும் AI!