/* */

நாமக்கல் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் தங்கமணி பிரச்சாரம்

நாமக்கல் அதிமுக வேட்பாளர் தமிழ் மணிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் தங்கமணி பிரச்சாரம் செய்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் தங்கமணி பிரச்சாரம்
X

நாமக்கல் அதிமுக வேட்பாளர் தமிழ் மணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முன்னாள் அமைச்சர் தங்கமணி.

நாமக்கல் மாரியம்மன் கோயில் அருகில் நடைபெற்ற பிரச்சாரத்தில், அதிமுக வேட்பாளர் தமிழ்மணிக்கு ஆதரவு கேட்டு, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

தமிழகத்தின் உரிமையை மீட்க அனைவரும் அதிமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பிரச்சாரம் செய்தார்.

நாமக்கல் லோக்சபா தொகுதி, அதிமுக வேட்பாளர் தமிழ்மணியின் இறுதிகட்டப்பிரச்சாரம், நாமக்கல் நகராட்சிப் பகுதியில் நடைபெற்றது. நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் 18 இடங்களில் மின்னல்வேக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்தை முன்னிட்டு நகரின் முக்கிய வீதிகளில் அதிமுக தொண்டர்களின் இருசக்கர வாகண பேரணி நடைபெற்றது. நாமக்கல் நகர செயலாளர் பாஸ்கர், பரமத்திவேலூர் எம்எல்ஏ சேகர் ஆகியோர் முன்னிலையில், முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான தங்கமணி, வேட்பாளர் தமிழ்மணிக்கு ஆதரவு கேட்டு, நாமக்கல் நகரில் திறந்த ஜீப்பில் நின்று பேசியதாவது:

கடந்த 3 ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகம் அதன் உரிமையை இழந்துவிட்டது. தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால், மாநிலம் முழுவதும் ஆறுகள் வறண்டு, குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. திமுக கூட்டணி கட்சியாக இருப்பதால் கர்நாடகாவிடம் போராடி தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெற முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை. 2019ம் ஆண்டு இதேபோன்ற சூழல் ஏற்பட்டபோது அப்போதைய முதல்வர் எடப்பாடியாரின் ஆலோசனையில் பேரில், அதிமுக எம்.பிக்கள் 23 நாட்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தி, தண்ணீரைப் பெற்றுக்கொடுத்தனர். தற்போது திமுகவில் 39 எம்.பிக்கள் இருந்தும் அவர்கள் காவிரியில் நமக்குள்ள உரிமையைப் பெற்றுத்றுத்தர நடவடிக்கை எடுக்கவில்லை.

மீண்டும் லோக்சபா தேர்தலில் திமுக வெற்றிபெற்றால் நமது உரிமைகள் முழுமையாக பறிபோய்விடும். எனவே தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமானால், மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று நமது எம்.பிக்கள் டெல்லிசெல்லவேண்டும். அதற்கு அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவளித்து நமது வேட்பாளர் தமிழ்மணியை வெற்றிபெறச்செய்ய வேண்டும்.

தமிழகத்தைக் காப்போம் என்று கூறிவிட்டு, கஞ்சா போதைப்பொருளை நடமாட விட்டுள்ளனர். லாட்டரி அதிபரிடம் ரூ. 580 கோடி தேர்தல் நன்கொடை பெற்றுக்கொண்டு தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள், ஆன்லைன் லாட்டரி போன்றவறை மறைமுகமாக அனுமதித்துள்ளனர். இதனால் ஏராளமான பொதுமக்களும், இளைஞர்களும் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் என்ற கோஷத்துடன் அதிமுக களத்தில் இறங்கியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

அதற்கு மாறாக ஏற்கனவே அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்குத்தங்கம் திட்டம், இலவச லேப்டாப் திட்டம், பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் போன்றவற்றை முடக்கி வைத்துள்ளனர். இன்று தங்கம் விற்கும் விலையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் இருந்தால் ஏழை பெண்கள் திருமணத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். எனவே நடைபெற உள்ள பார்லி தேர்தலில் திமுகவை தோற்கடித்தால்தான், அவர்கள் மீண்டும் இதுபோன்ற நலத்திட்டங்களை கொண்டு வருவார்கள் எனவே, தேர்தலில் திமுகவை புறக்கனித்து அனைவரும் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

லோக்சபா தேர்தலில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலை வீசிக்கொண்டிருக்கிறது. இந்த 3 ஆண்டுகால தி.மு.க, அரசில், மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் வந்துள்ளது. அதன் காரணமாக, வெயில் என்றும் பாராமல், பொதுச்செயலாளர் பழனிசாமி வரும்போது, மக்கள் அலை அலையாக வந்து கொண்டிருக்கிறார்கள். சில தேர்தல் கருத்து திணிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கருத்துக் கணிப்பை பொருத்தவரை நாங்கள் நம்புவது கிடையாது. 1998 ல், இதுபோன்ற கருத்து கணிப்பில், இரண்டே தொகுதி மட்டும் அ.தி.மு.க, வெற்றி பெறும் என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கின்றபோது தெரிவித்தனர். ஆனால், 30 லோக்சபா தொகுதியில் நாங்கள் வெற்றி பெற்றோம். அதனால், தமிழகத்திற்கும், கருத்து கணிப்பிற்கும் சம்பந்தம் கிடையாது. நாங்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறோம். நிச்சயமாக எங்களது வேட்பாளர் தமிழ்மணி, லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இதேபோன்று, பொதுச்செயலாளர் பழனிசாமி, மிகப்பெரிய வெற்றியை பெறுவது ஜூன் 4ம் தேதி அனைவருக்கும் தெரிந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் காந்திமுருகேசன், வக்கீல் பாலுசாமி உள்ளிட்ட திரளான அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பிரச்சார நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

Updated On: 17 April 2024 7:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  4. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  5. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  6. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  7. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  8. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  9. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  10. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...