நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி காட்டுதல்கள்
உச்சநீதிமன்றம் (கோப்பு படம்).
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் 7 வழிகாட்டுதல் நெரிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
கொல்கத்தா நகராட்சியின் நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கை எதிர்த்து விமல் குமார் ஷா என்பவர் உள்ளிட்டோர் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கையை ஐகோர்ட் ரத்து செய்தது. அதை எதிர்த்த நகராட்சியின் அப்பீலை நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா, அரவிந்த் குமார் கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் நேற்று டிஸ்மிஸ் செய்தது.
மேலும் இது தொடர்பாக நீதிபதிகள் அளித்த தீர்ப்பு உத்தரவில் நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கையின் போது அரசு நிர்வாகம் பின்பற்ற வேண்டிய ஏழு கடமைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை நீதிபதிகள் வழங்கி உள்ளனர்.
அவற்றின் விவரம் வருமாறு:-
நிலத்தை கையகப்படுத்த அரசு விரும்புகிறது என்ற தகவலை நில உரிமையாளருக்கு முதலில் தெரிவிக்க வேண்டும். நிலம் காயப்படுத்துதல் தொடர்பான ஆட்சேபனைகளை கேட்டு அறிய வேண்டும். நிலத்தை கையகப்படுத்தும் முடிவை அதற்கான நியாயமான காரணத்துடன் நில உரிமையாளருக்கு தெரிவிக்க வேண்டும்.
நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கை பொதுநல நோக்கில் தான் மேற்கொள்ளப்படுகிறது என்பதை நிலம் உரிமையாளருக்கு விளக்க வேண்டும்.
கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு நியாயமான நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கையை நடைமுறைகள் தொடர்பான குறிப்பிட்ட கால அட்டவணைப்படி சிறப்பாக செயல்படுத்த வேண்டும். கையகப்படுத்துதல் நடவடிக்கையை முழுமையான நிறைவு செய்ய வேண்டும்.
இவ்வாறு ஏழு வழிகாட்டுதல்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளால் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசின் பல்வேறு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு இந்த 7 வழிகாட்டுதல் நெறிமுறைகள் இனி வழிகாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu