பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர் கைது..!

பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான  ஓட்டுநர் கைது..!
X

விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

டிரைவர் சிவராஜ் மற்றும் உதவியாளர் ஆகியோர் அந்த வாலிபரை ஓரத்தில் படுக்க வைத்துவிட்டு புறப்பட்டு சென்றது தெரியவந்தது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே கடந்த 13 ஆம் தேதி அதிகாலையில் வாலிபர் ஒருவர் உடலில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதுகுறித்து பேருந்து நிலையத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது ஆசிப் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த வாலிபரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் யார் எனத் தெரியாத நிலையில், ஏதோ ஒரு வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது தனியார் பேருந்து ஒன்று அவர் மீது ஏறி இறங்கும் சிசிடிவி கேமரா காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தது. விசாரணையில் அடையாளம் தெரியாத நபர் மீது ஏறி இறங்கிய சுற்றுலா பேருந்து சாம் டிராவல்ஸ் என்பதும், அந்த பேருந்து தினசரி பெங்களூரில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது. பேருந்தில் அடிபட்டு வாலிபர் கீழே விழுந்ததும் டிரைவர் சிவராஜ் மற்றும் உதவியாளர் ஆகியோர் அந்த வாலிபரை ஓரத்தில் படுக்க வைத்துவிட்டு ஊட்டிக்கு புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து பேருந்து ஓட்டுனர் மற்றும் கிளீனர் ஆகியோர் ஊட்டியில் சுற்றுலா பேருந்தை நிறுத்திவிட்டு தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த ஓட்டுனர் மற்றும் உதவியாளரை மேட்டுப்பாளையம் போலீசார் இன்று கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேருந்தில் அடிபட்டு இறந்த வாலிபர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
மூச்சுத் திணறல் அப்படினா என்ன.....? இதனால்  அபாயமா....பயப்பட வேண்டாம்  அதற்கான வழிகளை அறியலாம்..!