சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
X

Erode news- புஞ்சை புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

Erode news- ஈரோடு மாவட்டம் சத்தி, பு.புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை (இன்று) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Erode news, Erode news today- சத்தி, பு.புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை (இன்று) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட ஆண்டவன் நகரில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.32.82 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருவதையும், சத்தியமங்கலம் கூத்தனூர்சாலை பரிசல்துறை வீதி ரங்கசமுத்திரம் பகுதியில் குடிநீர் பகிர்மான குழாய் அமைக்கும் பணியினையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இத்திட்டத்தின் மூலம் சுமார் 42,000 மக்கள் பயன்பெறுவார்கள்.


தொடர்ந்து, புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.52.07 கோடி மதிப்பீட்டில் 64.14 கி.மீ நீளத்திற்கு பகிர்மான குழாய் பதிக்கும் பணி, 20.99 கி.மீ நீளத்திற்கு பிரதான குழாய் பதிக்கும் பணி, 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டி, 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, 7,195 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி, 68.34 கி.மீ நீளத்திற்கு சாலை சீரமைப்பு மேற்கொள்ளும் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் வாரச்சந்தை பகுதியில் 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு பக்கவாட்டுச்சுவர் கட்டப்பட்டு வருவதையும், வ.உ.சி வீதியில் 35.13 கி.மீ நீளத்திற்கு குழாய் பதிக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இத்திட்டத்தின் மூலம் சுமார் 23,120 மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி ஆணையாளர்கள் செல்வம் (சத்தியமங்கலம்), முஹமது சம்சுதீன் (புஞ்சை புளியம்பட்டி) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!