/* */

போதைபொருள் கடத்தல் தொடர்பாக இலங்கை வாலிபரை காஞ்சி கியூ பிரிவு போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தலைமறைவாக இருந்த இலங்கை வாலிபரை காஞ்சிபுரம் கியூ போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

போதைபொருள் கடத்தல் தொடர்பாக இலங்கை வாலிபரை காஞ்சி கியூ பிரிவு போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
X
போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் இலங்கையை சேர்ந்த வாலிபரை காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். (பைல் படம்)

தமிழகத்தில் அதிக அளவில் போதைப் பொருட்கள் கல்லூரி மற்றும் மாணவர்களிடையே உலவும் நிலை அதிகரித்து கிராமங்களையும் எட்டி வருவதை கண்டு சமூக ஆர்வலர்கள் இதற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீசார் ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பாக இலங்கையை சேர்ந்த சிலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்ததில் இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் முக்கிய நபராக விளங்கி வந்தது தெரியவந்தது.

முக்கிய குற்றவாளியாக கருதி இவரை தேடி வந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் இவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரை காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்ட பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் -1ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக மீண்டும் காஞ்சிபுரம் கியூ பிரிவு காவல்துறையினர், போலீஸ் காவலில் எடுத்து மேலும் பலர் குறித்து விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On: 5 July 2021 6:03 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  8. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  9. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  10. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி