/* */

ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Erode news- ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) சேருவதற்கு வரும் ஜூன் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
X

Erode news- அரசு ஐடிஐக்களில் சேர்க்கை. (மாதிரி படம்)

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) சேருவதற்கு வரும் ஜூன் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களான ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் பொறியியல் (எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், ஒயர்மேன், வெல்டர், டெக்ஸ்டைல்ஸ், மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள், ஏசி மெக்கானிக்) ஆகிய பாடப்பிரிவுகளின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது

மேலும், பொறியியல் அல்லாத (கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் கட்டிடபட வரைவாளர்) மற்றும் Industry 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிதாக துவக்கப்பட்டுள்ள பிரிவுகளான (Manufacturing Process Control and Automation, Industrial Robotics and Digital Manufacturing Technician, Basic Designer and Virtual verifier Advanced CNC Machining Technician) 2024ம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வருகிற ஜூன் 7ம் வரை நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் மாத உதவித்தொகை ரூ.750, விலையில்லா லேப்டாப், சைக்கிள், சீருடை, பாட புத்தகங்கள், காலணி மற்றும் பஸ் பாஸ் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த பெண் பயிற்சியாளர்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 மாதந்தோறும் வழங்கப்படும். 8ம் வகுப்புடன் இரண்டாண்டு ஐடிஐ பயிற்சி மற்றும் 10ம் வகுப்புடன் இரண்டாண்டு ஐடிஐ பயிற்சி முடித்தவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் முறையே 10ம் வகுப்பு, 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு மத்திய, மாநில அரசு மற்றும் பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். விபரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு 0424-2275244, 9499055703 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:-

(அசல் மற்றும் நகல்) 8ம் வகுப்பு/ 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் 10ம் வகுப்பு முடித்திருப்பின் 9ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்)

* மாற்று சான்றிதழ்

* சாதி சான்றிதழ்

* ஆதார் அட்டை

* பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 4

விண்ணப்பக் கட்டணம் ரூ.50 மற்றும் சேர்க்கைக் கட்டணம் ரூ.200 ஒரு அசல் மதிப்பெண் சான்றிதழுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு அசல் மதிப்பெண் சான்றிதழுக்கும் ரூ.50 மேற்காணும் ஆவணங்களை நேரில் எடுத்து வரவும். ஆன்லைனில் பதிவுக்கட்டணம் ரூ.50 செலுத்த ஏடிஎம் அட்டை , போன் பே, கூகுள் பே கொண்டு வர வேண்டும். எனவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 15 May 2024 1:30 AM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...