/* */

ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பு

Erode Jawli Market-நீண்ட நாடுகளுக்கு பின்னர் ஈரோடு ஜவுளி கடைகளில் சில்லறை வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பு
X

ஈரோடு ஜவுளி சந்தையில் விறுவிறுப்பாக நடைபெறும் வியாபாரம்.

Erode Jawli Market-ஈரோடு மாநகர் பன்னீர்செல்வம் பார்க் அருகே கனி மார்க்கெட் ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 250 தினசரி கடைகளும், 730 வாரச்சந்தை கடைகளும் செயல்பட்டு வந்தன. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பிகார், குஜராத் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் இந்த சந்தையில் வந்து குவிவார்கள். மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு அனைத்து வகையான துணிகளும் குறைந்த விலையில் விற்கப்படுவதால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

குழந்தைகளுக்கான ரெடிமேட் சட்டை, இளைஞர்கள், பெண்கள், முதியவர்களுக்கான சட்டைகள் குறைந்த அளவில் கிடைக்கின்றன. இங்கு சாதாரண நாட்களில் சுமார் ரூ.1 கோடி வரையும், பண்டிகை காலங்களில் சுமார் ரூ.5 கோடி வரையும் வர்த்தகம் நடைபெறும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் கடந்த வருடம் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக கனி மார்க்கெட் ஜவுளி சந்தை சில மாதங்கள் மூடப்பட்டது. இதனால் இதனை நம்பி இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பின்னர் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பியதால் கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா 2-ம் அலை வேகம் எடுத்ததால் கடந்த மே மாதம் 6-ந் தேதி முதல் கனி மார்க்கெட் ஜவுளி சந்தை மூடப்பட்டது. இதனால் மீண்டும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தங்கள் வாழ்வாதாரத்தை காக்க பெரும்பாலான ஜவுளி வியாபாரிகள் மாற்று வேலைக்கு செல்லத் தொடங்கினர். கட்டிட தொழில், செங்கல் சூளை போன்ற வேலைக்கு சென்று குடும்பத்தைக் காப்பாற்றினர். இந்நிலையில் மீண்டும் தொற்று குறையத் தொடங்கியதால் கடந்த 5 ஆம் தேதி முதல் மீண்டும் ஜவுளி சந்தை செயல்படத் தொடங்கியது.

அதே சமயம் வாரச் சந்தைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜவுளி சந்தையில் சில்லறை வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் நீண்ட நாள் கழித்து ஜவுளி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்தது.தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதால் இனி வரும் நாட்களில் ஜவுளி சந்தையில் வழக்கம் போல் அதிகளவிலா வியாபாரம் நடைபெறும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 April 2024 5:57 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை