/* */

திருவண்ணாமலை உதவி ஆய்வாளர் வாகனத்திற்கு தீ வைத்த கள்ளக்காதலி கைது

திருவண்ணாமலையில் உதவி ஆய்வாளர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்த கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

திருவண்ணாமலை உதவி ஆய்வாளர் வாகனத்திற்கு தீ வைத்த கள்ளக்காதலி கைது
X

திருவண்ணாமலை மத்தலாங்குளம் தெருவை சேர்ந்தவர் சுந்தர். திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அInstanews, Tamilnadu, இன்ஸ்டாநியூஸ், தமிழ்நாடு,வரது மனைவிக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனியாக வசித்து வரும் சுந்தருக்கும், வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த சுமதி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இவர்கள் சில வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. சுமதி அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் சுந்தர் வேலையை முடித்து விட்டு தனது . வீட்டின் போர்டிகோவில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கச்சென்றார். ஏற்கனவே அங்கு அவரது கார் ஒன்றும் நிறுத்தப்பட்டு இருந்தது.

இரவு சுமார் 12.30 மணியளவில் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தருக்கு போன் செய்து வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த காரும், மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிவதாக தெரிவித்தனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைத்துறையினர் அங்கு வந்து தீயை அணைத்தனர்.

இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் உதவி காவல் கண்காணிப்பாளர், கிழக்கு காவல் ஆய்வாளர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீட்டுகளில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது சப்- இன்ஸ்பெக்டர் சுந்தர் வீட்டின் பக்கத்து வீட்டின் கேட்டை திறந்து, பெண் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது பதிவாகி இருந்தது. இதையடுத்து சுந்தர் கொடுத்த தகவலின் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் சுந்தரின் கள்ளக்காதலி சுமதியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் காழ்ப்புணர்ச்சி காரணமாக காரையும், மோட்டார் சைக்கிளையும் கொளுத்தியதாக தெரிவித்தார். இதையடுத்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமதியை கைது செய்தனர்.

Updated On: 21 Jun 2021 3:06 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு