/* */

செவித்திறன் குறைவுடையோருக்கான பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

செவித்திறன் குறைவுடையோருக்கான பள்ளி மாணவர்கள் 43 பேருக்கு ரூ.2.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிப்பு

HIGHLIGHTS

செவித்திறன் குறைவுடையோருக்கான பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

செவித்திறன் குறைவுடையோருக்கான பள்ளி மாணவர்கள் 43 பேருக்கு ரூ.2.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு

நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்ட செவித்திறன் குறைவுடையோருக்கான நடுநிலைப்பள்ளியினை சேர்ந்த 43 நபர்களுக்கு ரூ.2.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர்கவிதா ராமு வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள இலவச பயண அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செவித்திறன் குறைவுடையோருக்கான நடுநிலைப்பள்ளியினை, உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் சட்டமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் மானியக் கோரிக்கையில் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அறிவித்துள்ளார்.

இதன்மூலம் செவித்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவியர்கள் தங்களது கல்வியை தொடர்ந்து இப்பள்ளியின் மூலம் பயில்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், மூன்று மாணவர்களுக்கு காக்ளியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இம்பிளாண்ட் கருவிகள் பொருத்தப்பட்ட வர்களுக்கு, காக்கிளியர் இம்பிளாண்ட கருவிகளின் உதிரி பாகங்கள் பழுதடைந்ததை தொடந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.61,135- மதிப்பில் செவித்திறன் குறைவுடைய மூன்று மாணவர்களுக்கு புதிதாக உதிரி பாகங்கள் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் கல்வி பயிலும் 40 செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு ரூ.1,98,250- மதிப்பில் காதுக்கு பின்புறம் அணியும் நவீன காதொலிக் கருவிகள் என மொத்தம் ரூ.2,59,385- மதிப்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதனை மாணவர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு தங்களது கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு. இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 7 May 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு