/* */

திருநங்கைகள் ரூ.1 லட்சம் உதவித்தொகையுடன் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநங்கையர் தினமான ஏப்ரல் 15ம் தேதி வழங்கப்பட உள்ள விருதுக்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

திருநங்கைகள் ரூ.1 லட்சம் உதவித்தொகையுடன் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
X

பைல் படம்.

தமிழக அரசின் சார்பில், 2021-22 ஆம் ஆண்டிற்கான திருநங்கையர் விருது, திருநங்கையர் தினமான ஏப்ரல் 15ம் தேதி வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளைக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கவுரவிக்கும் வகையில், திருநங்கையர் தினமான ஏப்ரல் 15ம் தேதி, தமிழக அரசின் சார்பில், திருநங்கையருக்கான முன்மாதிரி விருது ரூ.1 லட்சம் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்டும்.

இவ்விருது பெற தமிழக அரசின் awards.tn.gov.in என்ற வெப்சைட்டில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் மூலம் வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. மேலும் இவ்விருது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்புகொண்டு விபரம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 Feb 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  5. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  6. திருவண்ணாமலை
    பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட மூன்று பேர் கைது!
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  9. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  10. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி