வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை

வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் சாதனை படைத்த, வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்களை பள்ளி தாளாளர் டாக்டர் ராஜன் பாராட்டினார்.

வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.

வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சிபிஎஸ்இ பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளது.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளி மாணவர் நித்தீஸ் ஜெய் சருண் 500க்கு 479 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி ரோபிகா 500க்கு 475 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தையும், மாணவன் சு. ஜீவசித்தார்த் 500க்கு 461 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் பாட வாரியாக ஆங்கிலம் 97, கணிதம் 95, இயற்பியல் 95, வேதியியல் 97, உயிரியல் 95, கம்ப்யூட்டர் சயின்ஸ் 99 ஆகிய மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பிரசன்னா 500க்கு 469 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி தனுஷ்யா 500க்கு 467 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மைத்ரேயி 500க்கு 429 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 10 ஆம் வகுப்பில் பாடவாரியாக ஆங்கிலம் 86, தமிழ் 99, கணிதம் 99, அறிவியல் 92, சமூக அறிவியல் 97 ஆகிய மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் ராஜன், மெட்ரிக் பள்ளியின் ஆலோசகர் ராஜேந்திரன், தலைவர் ராஜா, செயலாளர் சிங்காரவேலு, இயக்குநர் ராஜராஜன், முதல்வர்கள் யசோதா, காயத்திரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story