/* */

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட மூன்று பேர் கைது!

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட மூன்று பேர் கைது, தப்பியோட முயன்ற போது கீழே விழுந்ததால் கைமுறிவு

HIGHLIGHTS

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட மூன்று பேர் கைது!
X

திருவண்ணாமலை ஜெய் பீம் நகர் மற்றும் சாரல் பகுதியை சேர்ந்த சோனாச்சலம் என்கின்ற பாலாஜி நவீன் குமார் ஸ்டீபன் ராஜ் ஆகிய மூன்று பேர் மீது தனி தனியாக பல்வேறு கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது.

திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இவர்கள் அடிக்கடி ஆயுதங்களுடன் பொதுமக்களை மிரட்டுவது ரவுடித்தனம் செய்வது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்தனராம் . சம்பந்தப்பட்ட 3 பேர் மீதும் ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், தொடர்ந்து பொதுமக்களை மிரட்டி தகராறுகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு பல புகார்கள் சென்றுள்ளது.

மூவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கும் படி திருவண்ணாமலை நகர காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.

இதனை அடுத்து திருவண்ணாமலை நகர போலீசார் தனிப்படை அமைத்து மூன்று பேரையும் தேடி வந்தனர்.

இதிலையில் இந்த மூன்று குற்றவாளிகள் இருக்கும் இடத்தை தெரிந்தவுடன் தனிக் குழுக்கள் ஆகப் பிரிந்து அந்த மூவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

போலீசாரை கண்டதும் மூவரும் காவல்துறையினரிடம் பிடிபடாமல் இருக்க தப்பி ஓடி உள்ளனர்.

அப்போது அவர்கள் தவறி விழுந்ததில் மூன்று பேரின் கைகள் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் அதன் பிறகு அவர்களை அமுக்கிய போலீசார் திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர் சிகிச்சை முடிந்த பின்னர் அவர்கள் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது

Updated On: 16 May 2024 2:23 AM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...