புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

புதிய நீதிமன்றம் அமைப்பதற்கு  ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் 

கலசப்பாக்கம் அருகே புதிய நீதிமன்றம் அமைப்பதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் பகுதியில் உள்ள பஸ் டிப்போவில் புதிய நீதிமன்றம் அமைப்பதற்கு திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் எதிரில் உள்ள பஸ் டிப்போவில் புதிய நீதிமன்றம் அமைப்பதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி ஆய்வு செய்தார் பின்னர் அவர் கூறுகையில், கலசப்பாக்கம் பகுதியில் போதுமான இட வசதி இல்லாமல் நீதிமன்றம் உள்ளதால் புதிய நீதிமன்றம் அமைப்பதற்கு அரசாணை வெளியிட்டு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

அதன்படி கடந்த இரண்டு ஆண்டு காலமாக புதிய நீதிமன்றம் அமைப்பதற்கு இடத்தை தேர்வு செய்து வருகின்றனர்.

இதுவரை இன்னும் முடிவு செய்யவில்லை. இப்பொழுது இந்த எலத்தூர் ஏரிக்கரை அருகாமையில் உள்ள பஸ் டிப்போவில் இடத்தை தேர்வு செய்துள்ளனர். விரைவில் இந்த இடத்தில் புதிய நீதிமன்றம் அமைப்பதற்கு சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தப்பட்டு விரைவில் நீதிமன்றம் அமைப்பதற்கு உண்டான பணிகள் தொடங்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி கூறினார். இந்த ஆய்வின்போது தாசில்தார் ராஜராஜேஸ்வரி மண்டல துணை வட்டாட்சியர் புவனேஸ்வரி , வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

கலசப்பாக்கம் தாலுகாவில் புதிய நீதிமன்றம் அமைப்பதற்கு இரண்டு வருட காலமாக வருவாய்த்துறையினர் இடம் தேடி வருகிறார்கள். இதற்கு முன்பு கலசப்பாக்கம் மேல் தெரு அருகாமையில் உள்ள வீர கோவில் எதிரே உள்ள இடத்தை தேர்வு செய்த போது பல்வேறு எதிர்ப்புகள் வந்ததால் அந்த இடத்தை விட்டு விட்டனர்.

பின்னர் அருணகிரி மங்கலம் அருகாமையில் உள்ள ஏரிக்கரை பகுதியில் இடத்தை தேர்வு செய்தனர். நீர்நிலை புறம்போக்கு என்று அந்த இடத்தையும் கைவிடப்பட்டது. தொடர்ந்து மேல் வன்னியனூர் மலைப்பகுதியில் இடத்தை தேர்வு செய்ய போது அந்த இடத்தில் பாறைகள் அதிகமாக உள்ளது என கூறி அந்த இடத்தையும் தேர்வு செய்யாமல் விடப்பட்டது.

இப்பொழுது தேர்வு செய்யப்பட்டுள்ள எலத்தூர் ஏரிக்கரை பகுதியும் நீர்நிலை புறம்போக்கு இடமா இல்லையா என தெரியவில்லை. இது தெரிந்த பிறகு தான் இந்த இடத்தில் நீதிமன்றம் வருமா என தெரிய வரும்.

நீர் நிலையிலிருந்து எவ்வளவு தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது என்பதை கண்டறியும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story