மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி

மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி

இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றை அடுத்த வெள்ளக்குளம் கிராமத்தில் மிளகாய் பயிரில் அறுவடைக்குப் பின்பு செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வெம்பாக்கம் வட்டார வேளாண் மை துறை சார்பில் ஆத்மா திட்டத்தில் மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சி நிகழ்ச்சிக்கு வட்டார வேளாண் அலுவலர் ரேணுகாதேவி தலைமை தாங்கினார்.

துணை வேளாண் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

தொழில்நுட்ப வல்லுனர் விஜயகுமார் நிகழ்ச்சியில் பங்கேற்று மிளகாய் பயிரில் அறுவடைக்குப்பின் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டி விற்பனை செய்தல் குறித்து விவசாயிகள் இடையே விவரமாக எடுத்துரைத்து பயிற்சி அளித்தார்.

தொடர்ந்து அறுவடைக்குப் பின் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து அறுவடை செய்வது குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு மிளகாய் சாகுபடி குறித்த தொழில் நுட்பங்கள் அடங்கிய கையேடுகள் வழங்கப்பட்டது.

பின்னர் விவசாயிகள் தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

இந்த பயிற்சி நிகழ்ச்சியில் வெள்ளக்குளம் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 50- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வேளாண் வட்டாரத்துக்கு உள்பட்ட தண்டரை கிராமத்தில், விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி மாணவிகள் தண்டரை கிராமத்தில் முகாமிட்டு தேமோா் கரைசல் குறித்தும், தேமோா் கரைசல் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளிடம் தெரிவித்து விழிபுணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், பயிா்களுக்கு தேமோா் கரைசலை தெளிப்பதன் மூலம் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்தலாம் எனவும், பூ பூக்கும் ரக கத்தரி, தக்காளி, வெண்டை போன்ற அனைத்து காய்கறி பயிா்களுக்கும், கொய்யா, மா, சப்போட்டா, நெல்லி உள்பட தோட்டக்கலை பயிா்களுக்கும் பூக்கும் முன்பும், பூத்த பின்பும் தேமோா் கரைசலை தெளிக்கலாம்.

இந்தக் கரைசலை தெளிப்பதன் மூலம் பூ பூக்கும் திறனை அதிகப்படுத்தும் என விவசாயிகளிடையே தெரிவித்தனா். இந்நிகழ்ச்சியில் வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் வேளாண்மை துறை அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story