வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்

வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
X

தொடர் மின்வெட்டை கண்டித்து  மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்

தமிழக முழுவதும் தற்போது கோடை வெப்பம் 108 டிகிரிக்கு மேல் வெயில் வதைக்கிறது. தற்போது கோடை வெப்பம் அதிக அளவில் உள்ள நேரத்தில் இரவில் புழுக்கம் அதிகமாக உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பிருதூர். கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது.

இதனால் வயதானவர்கள் குழந்தைகள் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் பெரிதும் அவதியுற்றனர்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் மின்சார துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளிக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

மின்சாரத்துறை அதிகாரிகள் பலமுறை புகார்களை அளித்தும் மெத்தனப் போக்கில் இருந்து எங்கள் புகார் குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதே போல நேற்று இரவு மின் துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் தவித்துள்ளனர் . பல மணி நேரத்திற்கு பின்பு மின்சாரம் வராத காரணத்தினால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் திடீரென நள்ளிரவு 12.30 மணி அளவில் மறியலில் ஈடுபட்டனர் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வந்தவாசி போலீசார் மற்றும் மின்சார துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு களைந்து சென்றனர்.

இந்த மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் போக்குவரத்து பாதிப்பு சற்று குறைவாகவே இருந்தது.

Tags

Next Story
ai automation in agriculture